இனி கோடி ரூபாய் குடுத்தாலும் கிடைக்காது! திடுதிப்புனு விற்பனையை நிறுத்தீட்டாங்க! ரொம்ப நல்ல கார் ஆச்சே!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்று என்ற பெருமையை சொனெட் பெற்றுள்ளது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுடன், கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் கியா சொனெட் காரின் 'ஆனிவர்சரி எடிசன்' (Anniversary Edition) கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விலை எவ்ளோப்பா?
கியா சொனெட் ஆனிவர்சரி எடிசன் மாடலின் ஆரம்ப விலை 10.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ரெகுலர் மாடலுடன் ஒப்பிடும்போது, டிசைனில் பல்வேறு அப்டேட்களுடன் கியா சொனெட் ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கியா சொனெட் காரின் ஆனிவர்சரி எடிசன் மாடல், இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர கூடிய வகையில் இருந்தது.
இவ்ளோ வசதிகளா!
ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் என கியா சொனெட் காரின் ஆனிவர்சரி எடிசன் மாடலில், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டிருந்தன.

பவர்ஃபுல் இன்ஜின்
கியா சொனெட் காரின் ஆனிவர்சரி எடிசன் மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜினை கியா நிறுவனம் ட்யூனிங் செய்திருந்தது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.
கியா சொனெட் காரின் ஆனிவர்சரி எடிசன் மாடலில் இன்னொரு இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டது. அது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை கியா நிறுவனம் வழங்கியிருந்தது.
இனி கிடைக்காது?
இந்த சூழலில், கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் இருந்து சொனெட் ஆனிவர்சரி எடிசன் மாடல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய சந்தையில் இனிமேல் கியா சொனெட் ஆனிவர்சரி எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. ஆனால் கியா சொனெட் கார் வழக்கம் போல் விற்பனையில் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனிவர்சரி எடிசன் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் மட்டும் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஆட்டோ எக்ஸ்போ
இந்த சூழலில் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவிற்கு கியா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பிரம்மாண்டமான வாகன கண்காட்சியில் கியா நிறுவனம் மொத்தம் 10 தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival) காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








