இந்த சொனெட் காரை முன்னாடியே விட்டிருக்கலாம்ல.. வாடிக்கையாளர்களை புலம்ப வைத்த கியா.. சொனெட் ஆரோக்ஸ் அறிமுகம்!

கியா (Kia) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் சொனெட் (Sonet)-ம் ஒன்று. இந்த மாடலிலேயே நிறுவனம் புதிதாக ஆரோக்ஸ் எடிசன் (Aurochs Edition) எனும் புதிய சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

வழக்கமான சொனெட் கார் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த பதிப்பாக இதனை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. சொனெட்டின் எச்டிஎக்ஸ் (HTX) வேரியண்டை தழுவியே இந்த சிறப்பு பதிப்பை கியா உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் நடுநிலையான பிரீமியம் வசதிகளைக் கொண்ட வேரியண்ட் ஆகும்.

Kia sonet aurochs edition

கியா நிறுவனம் புதிய ஆரோக்ஸ் எடிசனுக்கு அறிமுக விலையாக ரூ. 11.85 லட்சம் விலையை நிர்ணயித்து உள்ளது. இது ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ ஐஎம்டி, 1.0 லிட்டர் டர்போ டிசிடி, 1.5 லிட்டர் ஐஎம்டி மற்றும் 1.5 லிட்டர் ஏடி ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே ஆரோக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதில் 1.5 லிட்டர் ஏடி தேர்வே அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 13.45 லட்சம் ஆகும். ஏற்கனவே கூறியதை போல் கியா நிறுவனம் இந்த சிறப்பு எடிசனை அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட பதிப்பாகவே உருவாக்கி இருக்கின்றது.

Kia sonet aurochs edition front beauty

இதுதவிர, வழக்கமான சொனெட்டிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சில சிறப்பு அலங்காரப் பொருட்களை அது சேர்த்துள்ளது. அந்தவகையில், அதிக கட்டுமஸ்தான தோற்றத்தை பிரதிபலிக்கக் கூடிய அணிகலன்களை அதிகளவில் இந்த காரில் கியா நிறுவனம் சேர்த்திருக்கின்றது. ஸ்கிட் பிளேட்டுகள், முன் மற்றும் பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, வீல் சென்டர் கேப், முன் பக்க பம்பரின் மேல் பகுதியில் டேஞ்ஜரின் இன்செர்டுகள் மற்றும் டூர் சில்கள் உள்ளிட்டவையும் ஆரோக்ஸ் எடிசனில் கியா வழங்கி இருக்கின்றது. இந்த அம்சகள் கியா சொனெட்டிற்கு கூடுதல் அழகையும், கவர்ச்சியையும் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Kia sonet aurochs edition back design

இதன் அழகை மேலும் மெருகேற்றும் வகையில் அரோரா பிளாக் பேர்ல் (Aurora Black Pearl), ஸ்பார்க்கிளிங் சில்வர் (Sparkling Sliver), கிரேவிடா கிரே (Gravita Grey) மற்றும் கிளாசியர் ஒயிட் பேர்ல் (Glacier White Pearl) உள்ளிட்ட நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர வேறு எந்த மாற்றங்களையும் இந்த சிறப்பு பதிப்பு காரில் கியா நிறுவனம் வழங்கவில்லை. சொனெட் ஆரோக்ஸ் எடிசனில் தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப், சிங்கிள் பேனல் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பின் பக்கத்திற்கான ஏசி வென்ட் உள்ளிட்ட அம்சங்களும் புதிய சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பாதுகாப்பு அம்சங்களாக 4 ஏர் பேக்குகள், டயரின் பிரஷ்ஷரைத் தொடர்ந்து மானிட்டர் செய்யும் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், அனைத்து இருக்கைகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் வசதியையும் கியா நிறுவனம் இந்த புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிசனில் வழங்கியிருக்கின்றன. இதுபோன்று, இன்னும் பல சிறப்பு வசதிகளை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சொனெட் சிறப்பு பதிப்பில் கியா வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சிறப்பு பதிப்பு வழக்கமான கியா சொனெட்டைக் காட்டிலும் அதிக அழகான மற்றும் மிக சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட தேர்வாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், தற்போதைய சொனெட் கார் மாடலுக்கு கிடைத்து வருவதைப் போல மிக சிறந்த வரவேற்பு இந்த சிறப்பு பதிப்பிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 8:53 [IST]
English summary
Kia sonet aurochs edition launched in india price engine and colour option details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X