போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் குடுக்கும் புதிய கார்! மாருதி, டாடா எல்லாம் ஆடி போய் கெடக்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
அனேகமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாவது கட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதாவது நடப்பு 2023ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கியா சொனெட் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலை கியா நிறுவனம் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் புனே நகரில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இந்த புதிய மாடல் தற்போது கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. அனேகமாக கியா சொனெட் சிஎன்ஜி காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) மற்றும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG) ஆகிய கார்களுடன் கியா சொனெட் சிஎன்ஜி போட்டியிடும்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மற்றும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஆகிய கார்கள், வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மறுபக்கம் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரும், இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. கியா சொனெட் காரில் வழங்கப்பட்டுள்ள வழக்கமான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.
ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் சற்று குறையலாம். எனினும் சிஎன்ஜி மூலம் இயங்குவதால், சிறப்பான மைலேஜை (Mileage) வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், கியா சொனெட் சிஎன்ஜி மாடலில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கியா நிறுவனம் கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் இந்திய சாலையில் சோதனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கியா சொனெட் சிஎன்ஜி மாடலை தொடர்ந்து, இவை இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.
இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுதான், அனைத்து நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய போட்டி போட்டு கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தினாலும், எதிர்காலத்தில் அதற்கு மிக கடுமையான போட்டி ஏற்படவுள்ளதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








