கியா கார் காதலர்கள் ஆவலோடு காத்திருந்த தகவல் வெளியாகிருச்சு! மாருதிக்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!
ஃபேஸ்விஃப்ட் கியா சொனெட் (Kia Sonet Facelift) காருக்கு எப்போது புக்கிங் தொடங்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. கியா கார் பிரியர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்து வரும் இந்த காருக்கு விரைவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கியா (Kia) நிறுவனம் இந்தியாவில் விரைவில் அதன் புதுப்பிக்கப்பட்ட சொனெட் (Sonet Facelift) கார் மாடலை வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த காரின் அறிமுகத்தின் மீது இருப்பதைப் போலவே, இதன் புக்கிங் மீதும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆமாங்க, இந்த காருக்கு புக்கிங் எப்போது தொடங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த நிலையிலேயே, வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதி அன்று ஃபேஸ்லிஃப்ட் சொனெட் காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் சொனெட்டின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, இன்னும் புக்கிங் எப்போது தொடங்கும் என்பது பற்றிய விபரத்தை கியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த கார் இன்று (டிசம்பர் 14) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மேலும், இன்றே இந்த காருக்கு எப்போது புக்கிங் பணிகள் தொடங்கும் என்பது பற்றிய தகவலை இந்த நிறுவனம் அறிவிக்க இருக்கின்றது.

ஆகையால், இன்றைய தினம் இந்த காருக்கு எப்போது புக்கிங் பணிகள் தொடங்கும் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும். கியா நிறுவனம், புதுப்பித்தலின்கீழ் சொனெட்டில் பல்வேறு மாற்றங்களை செய்திருக்கின்றது. அதாவது, காஸ்மெட்டிக் மாற்றங்கள் பலவற்றை இந்த காரில் செய்திருக்கின்றது. காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என ரெண்டிலும் அது மாற்றங்களைச் செய்திருக்கின்றது.
ஏழு விதமான வேரியண்டுகளிலும், 11 விதமான வண்ண தேர்வுகளிலும் இந்த காரை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் மோட்டார் விஷயத்திலும் பன்முக தேர்வுகளை வழங்க இருக்கின்றது, கியா. 1.2 லிட்டர் பெட்ரோல் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐஎம்டி ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல அம்சங்களையும் இந்த காரில் கியா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பை கூடுதலாக்கும் பொருட்டு பன்முக அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லெவல் 1 அடாஸ், 6 ஏர் பேக்குகள் (அனைத்து வேரியண்டுகளிலும் இது இடம் பெற்றிருக்கும்), டச் அம்சம் கொண்ட ஏசி கன்ட்ரோல்கள், நான்கு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, குரல் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் விண்டோ ஆகியவை அம்சங்களே ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர, ரிமோட் ஏசி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து வீல்களும் இயங்கும் அம்சம்,10.25 அங்கு இன்ஸ்ட்ரூமென்ட் திரை, எலெக்ட்ரிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஓடிஏ அப்டேட்டுகள், கியா கன்னெக்ட், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், ஒயர்லெஸ் செல்போன் இணைப்பு மற்றும் போஸ் பிராண்டின் 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் கியா வழங்க இருக்கின்றது. இந்த கார்ச்சியான தோற்றத்திற்கும் குறைச்சலின்றி இருக்கும். எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்ஆல்-கள், மறு சீரமைப்பு செய்யப்பட்ட பம்பர், எல்இடி டெயில் லைட், பூட் லிட்டில் எல்இடி லைட் பார் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியாவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, செல்டோஸ் மற்றும் சொனெட்டிற்கு இந்தியர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனம் சொனெட்டின் ஃபேஸ்லிஃப்ட வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








