இந்தியாவே தவம் கிடக்கும் காருக்கு இன்று நள்ளிரவு முதல் புக்கிங் தொடக்கம்! வெப்சைட் க்ராஷ் ஆக போகுது பாருங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த ஒன்றாகும். இந்திய சந்தையில் மிக கடுமையான போட்டி நிறைந்த செக்மெண்ட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது. அனேகமாக வரும் ஜனவரி மாத தொடக்கத்தில், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு முன்னதாக நாளையில் இருந்து (டிசம்பர் 20) கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்க விரும்புபவர்கள் நள்ளிரவு 12 மணியில் இருந்து முன்பதிவுகளை செய்ய முடியும். கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம், அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலி ஆகியவற்றின் மூலம் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு தொகை 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெச்டிஇ (HTE), ஹெச்டிகே (HTK), ஹெச்டிகே+ (HTK+), ஹெச்டிஎக்ஸ் (HTX), ஹெச்டிஎக்ஸ்+ (HTX+), ஜிடிஎக்ஸ் (GTX) மற்றும் எக்ஸ்-லைன் (X-Line) என கியா சொனெட் கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும்.
அதே நேரத்தில் மொத்தம் 11 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கியா சொனெட் கார் விற்பனை செய்யப்படும். கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அவை 1.5 லிட்டர் டீசல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 7 ஸ்பீடு டிசிடி மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அதிநவீன வசதிகளுக்கும், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பஞ்சம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் இது மேலும் போட்டிகளை அதிகரித்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








