ராத்திரியே புக்கிங்கை தொடங்கிட்டாங்க.. இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திந்த காரை இனி நீங்களும் புக் செய்யலாம்!
தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட சொனெட் (Sonet) கார் மாடலை உலக அளவில் வெளியீடு செய்தது. இந்த வெளியீட்டு சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது கியா நிறுவனம் இந்தியாவில் சொனெட்டிற்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது.
நள்ளிரவு முதல் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. ரூ. 25 ஆயிரம் முன்தொகையிலேயே ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த காரின் டெலிவரி பணிகள் விரைவிலேயே தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரியிலேயே அந்த பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

ஆனால், துள்ளியமான நாள் எது என்பது பற்றிய விபரத்தை கியா நிறுவனம் தெரிவிக்கவில்லை. விலை பற்றி விபரங்கள் அறிவிக்கப்படும்போது, டெலிவரி தொடங்கும் நாள் தகவல் அறிவிக்கப்பட உள்ளன. இதுதவிர, கியா நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் சுலபமாக இந்த காரை வாங்கிக் கொள்ள ஏதுவாக கே-கோட் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதன் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களைக் காட்டிலும் கூடுதல் விரைவாக புதிய சொனெட்டை கியாவின் பழைய வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். புதுப்பிக்கப்பட்ட கியா சொனெட் காரில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்கு டிஜிட்டல் டிரைவர் திரை என இரண்டு அசத்தலான திரைகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 70க்கும் மேற்பட்ட கார் கன்னெக்ட் தொழில்நுட்பம், முன் பக்கத்தில் வென்டிலேட் இருக்கை, சன்ரூஃப் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், 6 ஏர்-பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து புதிய வசதியாக இந்த காரில் லெவல் 1 வகை அடாஸ் அம்சமும் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த அம்சம் கார் லேன் மாறாமல் இயங்க, மோதலைத் தவிர்த்து பயணிக்க மற்றும் பிளைண்ட் ஸ்பாட்டைக் கண்கானிக்க உதவும். இத்தகைய மாற்றங்களுடன் மட்டுமே கியா சொனெட் வந்திருக்கின்றது. இதன் எஞ்சின் விஷயத்தில் இப்போதைக்கு எந்த மாற்றத்தையும் கியா செய்யவில்லை என தெரிகின்றது.
ஆகையால், புதுப்பிக்கப்பட்ட சொனெட் காரிலும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசர் மோட்டார் தேர்வே கிடைக்க இருக்கின்றது. இந்த காருக்கு ரூ. 8 லட்சம் விலையை கியா நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வந்த பின்னர் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
கியா நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் அதன் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அது டீசல் வாகனங்களுக்கு மாற்றாக ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. விரைவிலேயே இந்த நடவடிக்கையில் கியா களமிறங்கிவிடும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே சில முன்னணி நிறுவனங்கள் டீசல் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி இருக்கின்றன. மாருதி சுஸுகிகூட தற்போது முழுமையாக பெட்ரோல் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கும் அது அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








