எல்லாரும் எதிர்பார்க்கும் கியா சொனெட் காரின் அறிமுகம் எப்போது?.. துல்லியமான தேதி பற்றிய தகவல் இதோ!

கியா (Kia) கார் காதலர்கள் பலரின் எதிர்பார்ப்பாக சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Sonet Facelift) இருக்கின்றது. இந்த கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் பலரின், குறிப்பாக, கியா (Kia) கார் பிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக ஃபேஸ்லிஃப்ட் சொனெட் (Sonet Facelift) இருக்கின்றது. இந்த காரின் அறிமுக நாள் பற்றிய விபரமே தற்போது வெளியாகி உள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்றே இந்த காரை அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Kia sonet facelift

அன்றைய தினமே காரின் விலை எவ்வளவு மற்றும் புக்கிங் பணிகள் இந்த காருக்கு எப்போதில் இருந்து தொடங்கப்பட இருக்கின்றது போன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் கியா அறிவிக்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், அறிமுக தினத்தன்றே புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, டெலிவரி பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிய முதல் கார் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் காம்பேக்ட் எஸ்யூவி காரே சொனெட் ஆகும். இதனை 2020 செப்டம்பரிலேயே கியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Kia sonet facelift rear

இது விற்பனைக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையிலேயே அக்காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. ஃபேஸ்லிஃப்ட்-இன் கீழ் பலதரப்பட்ட அப்டேட்டுகளை இந்த காரில் கியா செய்திருக்கின்றது. வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் கணிசமான மாற்றங்களை கியா செய்திருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சொனெட்டின் படங்கள் இருக்கின்றன. காரின் கிரில் தொடங்கி பின் பக்க ஸ்டாப் லைட் வரை பல மறு வடிவமைப்பு செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக ஹெக்ஸோகனல் இன்செர்ட் மற்றும் குரோம் ஃபினிஷ்டு பேனல்கள் ஆகியவற்றை கூடுதலாக இந்த வெர்ஷனில் கியா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, காரில் பயன்படுத்தப்பட்டு இருந்த ஹெட்லைட்டும் மறு வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த லைட், க்ரில் மற்றும் குரோம் அணிகலன் ஆகியவையே மாறுபட்ட முகப்பு தோற்றத்தை புதிய சொனெட்டிற்கு வழங்கும் வகையில் உள்ளது. அத்துடன், கூடுதல் கவர்ச்சியை வழங்கும் வகையில் பம்பர் உள்ளது.

பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரியவில்லை. அதேவேளையில், கூடுதல் கட்டுமஸ்தாக புதிய சொனெட்டின் பக்கவாட்டு பகுதி காட்சியளிக்கின்றது. இதேபோல், புதிய சொனெட்டின் பின் பக்கமும் முன்பைவிட இப்போது அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு பின் பக்கத்தை முழுமையா ஆளும் வகையில் பட்டையாக வழங்கப்பட்டு இருக்கும் ஸ்டாப் லைட்டும், அடிப் பகுதி கருப்பு மற்றும் கார்னிஷ் குரோம் பம்பரே காரணமாக உள்ளது.

இதேபோல் இந்த காரின் உட்பக்கத்திலும் புதிய மற்றும் சிறப்பு வசதிகள் பல வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், துள்ளியமான விபரங்கள் அதுகுறித்து வெளியிடப்படவில்லை. இருப்பினும், புதிய அம்சங்களாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அடாஸ் (ADAS), டிரைவருக்கு பவர்டு இருக்கை ஆகியவை இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் சொனெட் காரில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் புதிய ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டிலும் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள் மற்றும் அலங்கரிப்பு ஆகியவற்றில் மட்டுமே புதிய சொனெட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. ஆனால், எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் கியா செய்யவில்லை. ஆகையால், இப்போது விற்பனையில் இருக்கும் சொனெட்டில் வழங்கப்படும் அதே எஞ்சின் தேர்வே புதிய பேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கின்றது.

அந்தவகையில், 83 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்ட 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 120 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்ட டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 115 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இப்போது விற்பனையில் இருக்கும் சொனெட்டில் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக செல்டோஸுக்கு அடுத்தபடியாக சொனெட்டிற்கு நல்ல டிமாண்ட் இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பு இன்னும் சூப்பராக வருந் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காகவே, ஃபேஸ்லிஃப்ட் சொனெட் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 15:26 [IST]
English summary
Kia sonet facelift india launch date revealed here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+