மிகவும் பாதுகாப்பான காரை குறைவான விலையில் களமிறக்கும் கியா! டாடா ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Meter Compact SUV) ரகத்தை சேர்ந்தது. போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி விட்டது.
வரும் டிசம்பர் 14ம் தேதி, கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ (Teaser Video) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு டிசைன் (Design) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், 'C' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர முன் பக்க க்ரில் அமைப்பின் டிசைனும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கியா சொனெட் வசதிகள் (Features) நிரம்பிய கார் ஆகும். ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இது தொடர்கிறது. இந்த புதிய மாடலில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பாஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொகுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாதுகாப்பிற்காக வழங்கப்படும் பல்வேறு வசதிகளின் தொகுப்பு ஆகும். எனவே கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அதிக பாதுகாப்பு கொண்டதாக இருக்கலாம்.
ஆனால் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்களில் (Variants) மட்டுமே அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. டிசைன் மாற்றங்கள் உடன், பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டாலும் கூட, கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் (Petrol), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள்தான், கியா சொனெட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பியதாக இருந்தாலும் கூட கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விலையில் வந்தால், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட், அதன் போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுடன், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








