நாடே காத்து கிடக்கும் காருக்கு புக்கிங்கை தொடங்கியது கியா! மாருதி, டாடாவுக்குலாம் இப்பவே ஒதறல் எடுத்திருக்கும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் டிசம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும்.

Kia Sonet Facelift

இந்தியாவில் உள்ள ஒரு சில கியா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் மட்டுமே, சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான முன்பதிவு தொகையில், புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளன. இதன்படி பார்த்தால், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

Kia Sonet Facelift Touchscreen

அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமல்லாது, கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் தற்போதைய மாடலில் இருந்து அப்படியே ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகளை பொறுத்தவரையில் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை எல்லாம் தவிர, லெவல் 1 அடாஸ் தொகுப்பு, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி சர்ரவுண்ட் கேமரா ஆகிய வசதிகளும் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அடாஸ் வசதியானது, டாப் வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்க போகிறது என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 23:47 [IST]
English summary
Kia sonet facelift unofficial bookings open read full story
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+