Kia Sonet புதிய அவதாரம் எடுக்க போகுது! இனி மைலேஜை வாரி வழங்கும்! டாடா, மாருதிலாம் நடுங்கீட்டு இருக்காங்க!

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உருவெடுத்துள்ளது. கியா நிறுவனத்தின் வெற்றிநடைக்கு கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய 3 கார்கள்தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

இதில் கியா சொனெட் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

Kia Sonet

ஆனால் இந்த செக்மெண்ட்டில் சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. மறுபக்கம் புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடாஸ் (ADAS) போன்ற அதிநவீன வசதிகளுடன் விற்பனைக்கு களமிறங்க தயாராகி வருகிறது.

எனவே கியா நிறுவனமும் சொனெட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது. கியா நிறுவனம் சொனெட் மட்டுமல்லாது, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Kia Sonet Wheel

இதில் கியா செல்டோஸ் காரின் புதிய மாடல் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்தில் கியா கேரன்ஸ் காரின் புதிய மாடல் களமிறக்கப்படலாம். இவற்றுக்கெல்லாம் அடுத்தபடியாக கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2 பெட்ரோல் (Petrol) மற்றும் 1 டீசல் (Diesel) என மொத்தம் 3 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இவை தவிர மைலேஜை (Mileage) வாரி வழங்க கூடிய சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கியா சொனெட் காரில் தற்போதைய நிலையிலேயே ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இன்னும் பல்வேறு புதிய வசதிகளுடன், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விலை (Price) சற்று உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.79 லட்ச ரூபாய் ஆகவும், இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.89 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 8-15 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் இன்னும் மிக கடுமையான போட்டிகளை ஏற்படுத்தும். இதனுடன் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் மிகப்பெரிய அளவிலான அப்டேட்களுடன் வரவுள்ளதால், போட்டி அனல் பறக்க போவது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 13:13 [IST]
English summary
Kia sonet new model 2023 facelift launch december expected price engine all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+