விற்பனையில் புதிய சாதனை படைத்த கியா சொனெட்... ஆனா உண்மையான ஆட்டமே இனிமேதான் இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இதுதான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் ஆகும். இந்த காருக்கு கிடைத்த மிக பிரம்மாண்டமான வரவேற்பையடுத்து, கியா நிறுவனம் அறிமுகம் செய்த கார்தான் சொனெட் (Kia Sonet).

கடந்த 2020ம் ஆண்டில்தான், கியா சொனெட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் கியா சொனெட் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கார்கள் போட்டியில் இருந்தாலும் கூட, கியா சொனெட் கார் தற்போது விற்பனையில் மிகப்பெரிய மைல்கல் ஒன்றை படைத்துள்ளது.

2024 Kia Sonet

3.68 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. வரும் காலங்களில் கியா சொனெட் கார் விற்பனையில் இன்னும் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை இதற்கு உறுதுணையாக இருக்கும்.

ஆம், கியா சொனெட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதன் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், முறைப்படி விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Kia Sonet Dashboard

அதற்கு பிறகு கியா சொனெட் காரின் விற்பனை மேலும் உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.79 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.

தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு கூடுதல் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது. தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய மாடலிலும் வழங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு, கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம்.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி கார் ஒன்றை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கியா க்ளாவிஸ் என்ற பெயரில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 17, 2023, 23:57 [IST]
English summary
Kia sonet new sales milestone all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+