ரூ.9.76 லட்சம் மட்டும் தான்!! எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் இந்த கியா காரை வாங்கலாம் - நியூ லெவல் ஆஃப் லக்சரி...

கியா சொனெட் (Kia Sonet) காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதி குறிப்பிட்ட வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகையில் சொனெட் காரின் எந்த வேரியண்ட் இப்படியொரு அட்டகாசமான வசதியை பெற்றுள்ளது? அதனை எந்த விலையில் வாங்கலாம்? என்பது உள்பட கியா சொனெட் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

சொனெட், கியா நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார். இந்த காரின் விலை குறைவான ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி1.2 எச்.டி.கே+ வேரியண்ட்டில் புதியதாக எலக்ட்ரிக் சன்ரூஃப் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இன்றைய கால மாடர்ன் கார்களில் சன்ரூஃப் ஆனது ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறி வருகிறது. ஏனெனில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விலை குறைவான கார்களில் சன்ரூஃப்-ஐ எதிர்பார்க்கின்றனர்.

kia sonet gets electric sunroof

கார்களை பிரீமியமாக காட்டுவதற்கும் சன்ரூஃப் உதவியாக விளங்குவதால், பல்வேறு கார் நிறுவனங்களும் சன்ரூஃப்-ஐ வழங்க விருப்பப்படுகின்றன. இதனை மனதில் வைத்தே, சொனெட் காரின் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் எச்டிகே+ வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அம்சம் வழங்கப்பட்டாலும், காரின் விலையில் பெரியதாக அதிகரிப்பு இல்லை.

கியா சொனெட் எச்டிகே+ வேரியண்ட்டின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.9.76 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சொனெட்டின் மத்திய நிலை வேரியண்ட்டான எச்டிகே+ 1.2 லி பெட்ரோல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.9.64 லட்சமாக இருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், எலக்ட்ரிக் சன்ரூஃப் அறிமுகத்தினால் காரின் விலை வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

kia sonet gets electric sunroof

சொனெட் காரின் எச்டிகே+ 1.2 லி பெட்ரோல் வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை & வணிக பிரிவின் முதன்மை அதிகாரி மியுங்-சிக் சோன் கூறியதாவது, "விதிமுறைகளை மறுவரையறை செய்து, டிரைவ் அனுபவங்களை மேம்படுத்தியதன் மூலம் சந்தையில் சொனெட்டின் பயணம் வரையறுக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி1.2 எச்.டி.கே+ வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ சேர்ப்பதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் விவேகமான தேவைகளை பூர்த்திச் செய்து, ஆடம்பர மற்றும் மதிப்பின் லிமிட்களை விரிவுப்படுத்துகிறோம். கியா உரிமை அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது". செல்டோஸ் மாடலுக்கு பிறகு, 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் இந்தியாவில் கியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது என சொன்னால் அதில் சந்தேகமே இல்லை.

kia sonet gets electric sunroof

அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களில் 3.3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கியா சொனெட் கார்களை வாங்கியுள்ளனர். சொனெட் காரில் கியா நிறுவனம் சமீபத்தில்தான் 3-வருட இலவச பராமரிப்பு மற்றும் 5-வருட உத்தரவாத கவரேஜை பூஜ்ஜிய முன்பணம் ஆப்ஷனுடன் அறிமுகப்படுத்தியது. புதிய எலக்ட்ரிக் சன்ரூஃப் அம்சத்தை பெற்றுள்ள சொனெட் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் எச்டிகே+ 1.2 லி பெட்ரோல் வேரியண்ட்டில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 83 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினை பெறும் சொனெட் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் எச்டிகே+ 1.2 லி பெட்ரோல் வேரியண்ட்டில் ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் & 2 ட்விட்டர்கள், முழுவதும் ஆட்டோமேட்டிக்காக செயல்படக்கூடிய ஏசி & ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சன்ரூஃப் இன்றைய கால கார்களில் வழக்கமான அம்சமாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட தற்போதைய சூழலில், சொனெட் காரில் எலக்ட்ரிக் சன்ரூஃபை கியா அறிமுகப்படுத்தி இருப்பது பெரியதாக ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சன்ரூஃப் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், காரின் விலை ரூ.12,000 மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 28, 2023, 22:28 [IST]
English summary
Kia sonet smartstream htk plus variant gets electric sunroof
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X