இந்தியர்களின் ஃபேவரிட் டீசல் கார்களை இனி இவங்க விற்கபோறது இல்லையா? சோகத்தில் டீசல் கார் காதலர்கள்!
டீசல் கார்களுக்கு எதிராக உலக நாடுகள் பல கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியா டீசல் கார்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும், இந்தியர்கள் பலர் டீசல் கார்களை அதிக ஆர்வத்துடன் வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இத்தகைய இந்தியர்களின் ஃபேவரிட்டான டீசல் கார்களை முன்னணி நிறுவனம் ஒன்று விரைவில் விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனம்? ஏன் இந்த திடீர் நடவடிக்கையை அது எடுக்க இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி இருக்கின்றது, கியா மோட்டார்ஸ் (Kia Motors). முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அது இந்தியாவில் உருவெடுத்து இருக்கின்றது. இத்தகைய கார் பிராண்டே ஓர் அதிரடி முடிவை எடுத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இந்த நிறுவனம் இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், கியா நிறுவனம் இனி வரும் நாட்களில் வரிசையாக ஹைபிரிட் கார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் பெட்ரோல் - டீசல் கார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவை இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனம் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்திவிட்டு, பெட்ரோல் மற்றும் கலப்பின வகை வாகனங்களை தீவிரமாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் டீசல் கார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏற்கனவே, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சில முன்னணி நிறுவனங்கள் டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக நிறுத்தி இருக்கின்றன. மாருதி சுஸுகியே இதற்கு மிக சிறந்த உதாரணம் ஆகும்.
இது தற்போது, பெட்ரோல், ஹைபிரிட், சிஎன்ஜி உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கியாவும் இந்த மாதிரியான பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோகார் இந்தியாவிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இகியாவின் நிர்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான டே-ஜின் பார்க் உடன் கியா கலந்துரையாடலை நிகழ்த்தியது.
இந்த கலந்துரையாடலின் வாயிலாகவே கியாவின் வருங்கால திட்டங்கள் தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. இந்தியா சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. இதற்கு உதவும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அந்தவகையில், எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவது மற்றும் தங்களின் வாகனங்களின் மாசு உமிழ்வு திறனைக் கட்டுக்குள் கொண்டு வருவது என பலதரப்பட்ட நடவடிக்கையில் அவை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது கியா நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு மிகவும் ஆபத்தான முடிவாகும். ஆமாங்க, நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீதம் டீசல் வாகனங்களே இருக்கின்றன.
இந்த மாதிரியான சூப்பரான வரவேற்பை டீசல் கார்கள் பெற்றுக் கொண்டு இருக்கின்ற சூழலிலேயே டீசல் கார்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பணியைத் தொடங்க கியா திட்டமிட்டு இருக்கின்றது. கியா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஒரு கார் மாடலில்கூட ஹைபிரிட் வசதியை வழங்கவில்லை.
நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் உள்ளிட்ட ஐசிஇ கார் மாடல்களையே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்திற்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இவற்றில் இதுவரை ஹைபிரிட் டெக்னாலஜியை வழங்கவில்லை. அதேவேளையில், உலக சந்தையில் இந்த பிராண்ட் ஹைபிரிட் வசதியை தன்னுடைய தயாரிப்புகளில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், பரந்த அளவில் எலெக்ட்ரிக் கார்களையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் இவி6 எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரும் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருக்கின்றது. ஆமாங்க, இதன் விலை சற்று அதிகம் ஆகும்.
பிரீமியம் தர கார் என்பதால் இதன் விலை அதிகமாக உள்ளது. மேலும், இதனை இந்தியாவில் இறக்குமதி செய்தே கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே காஸ்ட்லியான காராக கியாவின் எலெக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன. ஆனால், ஹைபிரிட் கார்கள் அப்படி இருக்காது என தெரிகின்றது.
இந்த கார்களை அது இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், கணிசமான அளவில் மட்டுமே அவை அதிக விலைக் கொண்ட கார்களாக இருக்கும். செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்களிலேயே கியா முதலில் ஹைபிரிட் வசதியை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே ஹைபிரிட் வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என பல வகைகளில் இந்த சிஸ்டத்தை கார்களில் வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








