இன்னும் 10 நாள் காத்திருங்க... கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு மீண்டும் புக்கிங் தொடங்கபோகுது..

கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் விற்கப்படும் சொகுசு கார்கள் எல்லாம் இந்த காருக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல என கூறும் அளவிற்கு அதிக லக்சூரி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கார் மாடலே கியா இவி6. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். இதற்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இதற்கே வெகு விரைவில் இந்திய சந்தையில் மீண்டும் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஏப்ரல் 15 ஆம் அன்றே இந்த காருக்கான முன் பதிவு பணிகள் நாட்டில் தொடங்கப்பட உள்ளன. இதனை கியா-வும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. சென்ற ஆண்டிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Kia to open bookings for EV6

யாரும் எதிர்பார்த்திராத, ஏன், நிறுவனமே எதிர்பார்த்திராத விற்பனையை அது பெற்றது. நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்காக ஒட்டுமொத்தமாகவே வெறும் நூறு யூனிட்டுகளை மட்டுமே ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு மட்டும் 400க்கும் அதிகமான யூனிட்டுகள் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகின. இது நிறுவனம் எதிர்பார்த்ததைவிட மும்மடங்கு கூடுதல் விற்பனையாகும்.

முதல் நூறு யூனிட்டுகளுக்கு புக்கிங் தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டது, ஆகையால், அடுத்தடுத்து என மேலும் சில நூறு யூனிட்டுகளுக்கான புக்கிங்கை ஏற்கத் தொடங்கியது, கியா. அந்தவகையில், மேற்கொண்டு 332 யூனிட்டுகள் கடந்த ஆண்டில் கூடுதலாக விற்பனைக்கு வழங்கப்பட்டன.

Kia to open bookings for EV6

இந்த நிலையிலேயே மீண்டும் இந்த காருக்கு விரைவில் புக்கிங்கை தொடங்க இருப்பதாக கியா அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்த முறை கூடுதலாக மேலும் சில புதிய நகரங்களிலும் விற்பனையைத் தொடங்கி இருப்பதாக கியா தெரிவித்து உள்ளது. இந்தியாவின் முக்கியமான 44 நகரங்களில் கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்கும்.

ஜிடி லைன் மற்றும் ஜிடி லைன் ஏடபிள்யூடி என இரு விதமான தேர்வுகளில் கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாக 2023 கியா இவி6 விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இந்த விலை உயர்விற்கு அப்கிரேடும் காரணம் இல்லை.

Kia to open bookings for EV6

அதாவது, எந்தவொரு கூடுதல் வசதியையும் வழங்காமல் இந்த விலை உயர்வை கியா செய்திருக்கின்றது. ஜிடி லைன் தேர்விற்கு ரூ. 60.95 லட்சமும், ஜிடி லைன் ஆல் வீல் டிரைவ் வசதிக் கொண்ட தேர்விற்கு ரூ. 65.95 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அறிமுகம் செய்யப்பட்டது நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் இது ரூ. 1 லட்சம் அதிகம் விலை ஆகும். மேலே பார்த்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். சென்ற ஆண்டில் 12 நகரங்களில் உள்ள 15 விற்பனையகங்கள் வாயிலாக மட்டுமே இந்த கார் விற்பனைக்கு வழங்கப்பட்டது.

Kia to open bookings for EV6

ஆனால், இப்போது 44 நகரங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 150 kW திறன் கொண்ட ஹை-ஸ்பீடு சார்ஜிங் மையங்களையும் 60 விற்பனையகங்களிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இவி6 எலெக்ட்ரிக் காரின் பயன்பாட்டை சுலபமானதாக்கும் விதமாக இந்த முயற்சியில் கியா களமிறங்கி இருக்கின்றது.

புதிய 2023 கியா இவி6 ஓர் முழு சார்ஜில் 708 கிமீ ரேஞ்ஜ் தரும் என நிறுவனம் வாக்குறுதி அளித்திருக்கின்றது. இதற்காக 77.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிபியூ வாயிலாக இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதனாலேயே இதன் விலை பலமடங்கு அதிகமாக தென்படுகின்றது.

இதனை கியா நிறுவனம் அதன் இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை பயன்படுத்தி வடிவமைத்து இருக்கின்றது. இதுவே, இவி6 காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும், நவீன தொழில்நுட்ப வசதிக்கும் காரணமாக இருக்கின்றது. இந்த காரில் அடாஸ் எனும் அதிநவீன டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக தானியங்கி சேவைகள் சிலவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு சென்ற ஆண்டில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தது. இதேபோல் இந்த ஆண்டிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெட்ராஸ் திரைப்பட கதாநாயகி தெரசா மற்றும் கிரிக்கெட் வீரர் தல தோனி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 17:40 [IST]
English summary
Kia to open bookings for ev6 on 15th april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X