ஓட்டை ஒடசல் கார்களுக்கு விடிவு காலம்! இந்த காரை போலீஸ், ஆம்புலன்ஸ் காராக கம்பெனியே மாத்தி கொடுக்க போறாங்க!
கியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது கேரன்ஸ் காரில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸிற்கான மாடிஃபிகேஷன்களுடனான காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி போலீசார் விரைவில் இந்த கார்களை தங்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்த துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நிறுவனங்களாக வரிசையாக தங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கலந்த கொண்ட முக்கியமான நிறுவனம் கியா. இந்நிறுவனம் நேற்று தனது இவி9 பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இது போக கேஏ4 என்ற எம்பிவி காரையும் அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியின் போது கியா நிறுவனம் பர்பஸ்-பீல்டு வாகனங்கள் என்ற பெயரில் 2 வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அது கியா கேரன்ஸ் எம்பிவி காரை போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தியது. இதில் கேரன்ஸ் காரில் தேவையான மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஆம்புலன்ஸ் கேரன்ஸ் காரை பொருத்தவரை வழக்கமான ஆம்புலன்ஸ் போல மஞ்சள் மற்றும் சிவப்பு நிற தீம்களில் இன் வெளிப்புறம் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிற கேரன்ஸ் கார் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கமும் பின்பக்கமும் ஆம்புலன்ஸ் என்ற எழுத்து பெரியதாக ஸ்டிக்கரிங் செய்யப்ப்டடுள்ளது.

இந்த காரின் உட்புறம் எப்படியான மாடிஃபிகேஷன் செய்யப்படும் என கியா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இது ஆம்புலன்ஸ் என்பதால் மருத்துவத்திற்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளே இருக்கும்படி இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்படலாம். முக்கியமாக 2 மற்றும் மூன்றாம் வரிசை சீட்டிற்கு பதிலாக ஃபிளாட்டான பெட்கள் பொருத்தப்படும் என்பது மட்டும் உறுதியான விஷயம்.
அடுத்தாக கியா கேரன்ஸ் போலீஸ் காரை பொருத்தவரை அதே கேரன்ஸ் வெள்ளை நிற தான் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சிவப்பு மற்றும் நீள நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த காரின் ரூஃப் பகுதியில் சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் உட்புறத்தில் என்ன மாடிஃபிகேஷன்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் சீட்டிங்கை பொருத்தவரை ஆம்புலன்ஸ் போல இல்லாமல்அதே 3 வரிசை சீட்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் கார் ஆகிய இரண்டையும் கியா கேரன்ஸ் என்டரி-லெவல் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் ஹெட்லைட்களை பொருத்தவரை ஹெலஜன் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெயில் லைட்களும் அதே ஹெலஜன் லைட்கள் தான். வீல்கள் ஸ்டீல் வீல்களில் பிளாஸ்டிக் கேப்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ஏர்மேம் பகுதியை சுற்றியும் ஹெட்லைட்களை சுற்றியும் சில்வர் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுளு்ளது. இதே போல டர்ன் இன்டிகேட்டர் முன்பக்க ஃபென்டர்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ரியர் வியூ கண்ணாடியில் இல்லை.
இந்த காரின் இன்ஜின்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. பெரும்பாலும் டீசல் இன்ஜின் தான் இதில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலையை முடிந்த அளவிற்கு குறைவாக இருக்கும்படி கியா நிறுவனம் வடிவமைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம். மக்களுக்கு கிடைக்கும் கியா கேரன்ஸ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் நேரச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் டீசல் கார் தான் அதிகமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜின், அடிப்படை வேரியன்ட் முதல் டாப் வேரியன்ட் வரை இந்த டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது ஆனால் இந்த போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் காரிலும் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








