வாரிசு பட குடும்பம் மாதிரி பணக்காரர்களுக்காகவே கியா வெளியிட்டுள்ள கார்! நாம இதை பார்க்க மட்டும் தான் முடியுமா?

கியா நிறுவனம் இந்தியாவில் தனது கியா கியா கேஏ4 காரை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது. இந்த கார் மூலம் கியா ஏராளமான வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க இதைச் செய்துள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

கியா இந்தியாவில் சிறப்பாக கார்களை விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான தயாரிப்புகள் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் வெளியிடும் பிரிமியம் எம்பிவி ரக கார் தான் கியா கார்னிவல் கார்.

 வாரிசு பட குடும்பம் மாதிரி பணக்காரர்களுக்காகவே கியா வெளியிட்டுள்ள கார்! நாம இதை பார்க்க மட்டும் தான் முடியுமா

கியா நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது கேஏ4 எம்பிவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது விற்பனையாகி வரும் கியா கார்னிவல் கார் செக்மெண்டிலேயே களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே செக்மெண்டில் டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா, மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகிய கார்கள் இருந்தாலும் அதன் விலை குறைவு, தற்போது கியா கார்னிவல் கார் தான் பிரிமியம் ரக காராக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கியா நிறுவனம் தனது கேஏ4 என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் கியா கார்னிவல் காருக்கு மாற்றாகக் களம் இறங்கும் என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் இதை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கியா நிறுவனம் இந்த காரை சொகுசு ஸ்மார்ட் ஆர்வி கார் என அறிவித்துள்ளது. ஆர்வி என கியா குறிப்பிடுவது ரிகிரியேஷன் வெஹிகில் என்பதன் சுருக்கம் தான். இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை வெளிப்புறத்தில் பார்க்க போல்டாக இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 வாரிசு பட குடும்பம் மாதிரி பணக்காரர்களுக்காகவே கியா வெளியிட்டுள்ள கார்! நாம இதை பார்க்க மட்டும் தான் முடியுமா

இந்த காரின் டிசைனை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள கியா நிறுவனத்திற்குச் சொந்தமான டிசைன் ஸ்டியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகமாக உட்புற வசதிகள் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் பயணிகள் உள்ளே சொகுசான பயணத்தை மேற்கொள்ள ஏற்ற காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் விஐபி லாஞ்ச் சீட்டிங் வசதி இருக்கிறது.

இந்த காரின் சீட்டிங்கை பொருத்தவரை ஏகப்பட்ட அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். இதைப் பயன்பாட்டிற்கு ஏற்றவிதமான லேஅவுட்களில் செட் செய்து கொள்ள முடியும். இதன் கடைசி வரிசை சீட்டை மடங்கி அதிகமான பொருட்களை ஏடுத்து செல்லும் வகையில் கூட மாற்ற முடியும். இது மட்டுமல்ல இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.

 வாரிசு பட குடும்பம் மாதிரி பணக்காரர்களுக்காகவே கியா வெளியிட்டுள்ள கார்! நாம இதை பார்க்க மட்டும் தான் முடியுமா

இந்த கியா கேஏ4 காரில் ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் அவாய்டென்ஸ் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் அவாய்டென்ஸ் அசிஸ்ட், என ஏகப்பட்ட பாதுகாப்புஅம்சங்கள் இருக்கிறது.இதுபோக இந்த வாகனங்களில் இரண்டு சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இது போக 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட் சார்ஜிங், மல்டி ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது.

இந்த காரில் இருக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சம் என்றால் அது ரியர் ஆக்குபென்டல்அலர்ட் தான். நீங்கள் காரை எடுக்கும் போது உங்களுக்குத் தெரியாமல் வீட்டிலுள்ள குழந்தைகளோ அல்லது செல்ல பிராணிகளோ காரின் உள்ள ஏறி பின் சீட்டில் இருந்தால் முன் சீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்சனையைச் சரி செய்ய இந்த அலர்ட் சிஸ்டம் யாராவது பின்சீட்டில் இருந்தால் டிரைவருக்கு அலர்ட் செய்யும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அல்ட்ரா சோனிக் வேவ்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பு சொகுசு மற்றும் தொழிற்நுட்ப வசதிகளை மனதில் வைத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கியா கேஏ 4 கார் இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கச் சொகுசு கார்களை விரும்பும் மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விலை மற்றும் எப்பொழுது மார்கெட்டிற்கு வருகிறது என்பது குறித்த விபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்தாண்டு இறுதியில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது ரூ20-25லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 13:42 [IST]
English summary
KIA unveils KA4 MPV in auto expo 2023
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+