பணத்த வீட்டிலேயே வச்சு அச்சடிப்பாங்களோ!! கருப்பு நிற மெர்சிடிஸ் காரை 2.64 கோடி ரூபா கொடுத்து வாங்கிய நடிகை!

இந்தியாவில் மிக உயரிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 (Mercedes Maybach S580)-ம் ஒன்றாகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 2.69 கோடி ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே முன்னணி நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த கியாரா அத்வானி, இந்த நடிகையே சொகுசு காரை வாங்கியவர் ஆவார். இவரின் இந்த கொள்முதல் பாலிவுட் திரை உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்தி திரை உலகின் முன்னணி நடிகைகளில் கியாரா அத்வானியும் ஒருவர் ஆவார்.

Kiara advani buys maybach s580

கடந்த ஆண்டே இவருக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவரும் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர்கள் இருவரும் நடிப்பில் மட்டும் ஒத்துப்போகவில்லை, கார்களை அதிகம் நேசிக்கும் விஷயத்திலும் இருவரும் ஒத்துப் போகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக கியாரா அத்வானியின் சமீபத்திய செயல் இருக்கின்றது.

இந்த ஜோடிகள் இடத்தில் ஏற்கனவே பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், புதிதாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 சொகுசு காரை தேடிச் சென்று வாங்கி இருக்கின்றனர். ஆகையால், லேட்டஸ்ட் மற்றும் அவர்களின் விலை உயர்ந்த காராக இந்த சொகுசு கார் மாறி இருக்கின்றது.

iara advani mercedes maybach s580,

தனது புதிய காருடன் கியாரா அத்வானி ஏற்கனவே வலம் வர தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் யுட்யூப் சேனல் கியாரா அத்வானி புதிய காருடன் வலம் வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவை பதிவின் இறுதியில் வழங்கி இருக்கின்றோம்.

மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரே மெர்சிடிஸ் மேபேக் எஸ் 580 ஆகும். இது ஓர் லக்சூரி செடான் ரக காராகும். இந்த காரில் உள்ள அசத்தலான ஆடம்பர அம்சங்களே கியாரா அத்வானியை அந்த காரை வாங்கத் தூண்டியிருக்கின்றது.

இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். இந்தியாவின் கரடு, முரடான சாலையில் பயணிக்கும்போது இதே மாதிரியான அனுபவமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்ற ஆண்டே இந்த காரின் லேட்டஸ்ட் தலைமுறை வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

இது களமிறங்கிய உடனேயே முகேஷ் அம்பானி தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பலர் மெர்சிடிஸ் மேபேக் சொகுசு காரை வாங்கி போட்டுவிட்டனர். அவர்களின் வரிசையிலேயே தற்போது கியாரா அத்வானியும் இணைந்திருக்கின்றார். மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 ஓர் மேட் இன் இந்தியா சொகுசு கார் ஆகும்.

ஆமாங்க, இந்த காரை பென்ஸ் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேவிலேயே உற்பத்திச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மற்றுமொரு வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது மேபேக் எஸ்680 ஆகும். இது முழுக்க முழுக்க பில்ட் செய்யப்பட்ட யூனிட்டாக (CBU) இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆகையால், இதன் விலை எஸ்580-யைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். இருப்பினும், ஒரு சில விஷயங்களில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும். கியாரா அத்வானி பயன்படுத்தும் எஸ்580 சொகுசு காரில் எண்ணற்ற ஆடம்பர மற்றும் பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள், மசாஜ், வெண்டிலேட் மற்றும் ஹீட் உள்ளிட்ட வசதிகள் அடங்கிய பிரீமியம் தர லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டுகள், மெர்சிடிஸ் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் மேபேக் எஸ்580இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவற்றுடன் சேர்த்து கார் இணைப்பு அம்சம், முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன நவீன கால அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களே அதானி, அம்பானி மற்றும் கியாரா அத்வானி போன்ற திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோரை வாங்கத் தூண்டியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாரா அத்வானியின் இந்த கார் கொள்முதல் பாலிவுட் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியாவின் பிற மொழி திரை உலகிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இவரின் இந்த செயல் பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. இதற்கு காரணம் காரின் அதிகபட்ச விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 17:50 [IST]
English summary
Kiara advani buys rs 2 69 crore worth mercedes maybach s 580 luxury sedan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+