காரை புதுசுபோல வச்சுக்க கிச்சா செய்த வேலையை பாருங்க... பல வருஷத்துக்கு தங்கம் போல ஜொலி-ஜொலிக்குமாம்...
நான் ஈ படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகின் மனம் கவர்ந்த நடிகராக மாறியவர் கிச்சா சுதீப். பிரபல கன்னட நடிகரான இவர் இந்தியாவின் பிற மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். ஆகையால், தென்னிந்தியாவின் பிரபலமான நடிகராக அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவர், மிகப் பெரிய வாகன காதலராகவும் இருக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓர் சம்பவத்தை அவர் நிகழ்த்தி இருக்கின்றார். கிச்சா சுதீப் இடத்தில் எக்கசக்க கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் ஒன்றே டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). அவரிடத்தில் இருக்கும் அதிக விலைக் கொண்ட சொகுசு கார்களிலும் இது ஒன்றாக இருக்கின்றது.

இந்த காருக்கே மேட் பிபிஎஃப் (Matte Paint Protection Film) வேலையை அவர் செய்திருக்கின்றார். வாகனங்களின் பெயிட்டின் ஆயுட்காலத்தைக் காக்க இது பெரும் உதவியாக இருக்கும். எனவேதான் கிச்சா சுதீப் இதனை டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு செய்திருக்கின்றார். டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக மிக அதிக விலைக் கொண்ட காராக வெல்ஃபையர் இருக்கின்றது.
இந்த காரையே எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பெரும் தொகையை செலவு செய்திருக்கின்றார், கிச்சா சுதீப். இதனால் பல ஆண்டுகளுக்கு அந்த டொயோட்டா வெல்ஃபையர் புத்தம் புதிதுபோல் இருக்கும். மேட் பெயிண்ட் புரடெக்சன் ஃபிலிம் பெயின்டின் புது பொலிவை மட்டுமல்ல ஸ்கிராட்சுகளிடம் இருந்தும் அது பாதுகாக்கும். வாகனங்களை வெளியில் நிறுத்துவதால் தூசு மற்றும் இலை சறுகுகளால் அவற்றின் மேல் சிறு சிறு கீரல்கள் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்க்கும் விதமாகவும் பிபிஎஃப் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாகனத்தை அதிகம் நேசிப்பவர்கள், அதனை எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் இந்த பிபிஎஃப்-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இது அனைத்து வானிலைக்கும் ஏற்றதாக இருக்கின்றது.
மேலும், நேரடியாக வாகனத்தை வெயிலில் நிறுத்தும்போது அது எந்த வித பாதிப்பையும் சந்திக்காது என்பது குறிப்பிடத்தகுநத்து. இதனாலேயே பலர் விரும்பி பெயிண்ட் புரடெக்சன் ஃபிலிமை தங்களின் வாகனங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே கிச்சா சுதீப்பும் தன்னுடைய வெல்ஃபையர் சொகுசு எம்பிவிக்கு பெயிண்ட் புரடெக்சன் ஃபிலிமை பயன்படுத்தி இருக்கின்றார்.
டொயோட்டாவின் இந்த கார் ரூ. 96.55 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இதில் அமர்ந்து பயணிக்கும்போது மன்னர்களின் அரியணையில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை வழங்கும்.
இதன் இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட், லெக் ரெஸ்ட், தேவைக்கேற்ப சாய்த்துக்கொள்ளுதல் என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது நெடு நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அம்சம் ஆகும். இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகள் சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், வான்வெளியை கண்டு ரசிக்கும் விதமாக இரு சன்ரூஃப் அமைப்புகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிவி, 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரிமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுடன் சேர்த்து 7 ஏர்-பேக்குகள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இவற்றுடன், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வெல்ஃபயர் எம்பிவியில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், டொயோட்டா வெல்ஃபயர் காரில் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய பெட்ரோல் மோட்டார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் பெட்ரோல் எஞ்ஜின் 2.5 லிட்டர் ரகமாகும்.
இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. மின் மோட்டார் 141 பிஎச்பி வரை திறனை வெளியேற்றும். இவையிரண்டும் இணைந்து காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்குகின்றது. மேலும், லிட்டர் ஒன்றுக்கு 16.35 கிமீ வரை மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனத்தின் பெயிண்டையும், புதுத் தன்மையையும் நீண்ட நாட்களுக்கு காக்க வேண்டும் எனில் கிச்சா சுதீப் செய்திருப்பதை போல கூடுதல் கோட்டிங் பாதுகாப்பு கோட்டிங்கை செய்வதே சிறந்த வழியாகும். இதன் வாயிலாக புதுப் பொலிவு கிடைக்கும். மேலும், கீரல்கள் உள்ளிட்டவற்றையும் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications