மனுஷங்கதானா இவங்க எல்லாம்... குழந்தைய இப்படியா தனியா விட்டு போறது! உசுறே போச்சு! ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க!

ஆட்கள் இல்லாத கார்களில் குழந்தைகள், விபரம் அறியாத சிறுவர்கள் மற்றும் விலங்குகளை தனித்துவிட்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் இந்த ரிஸ்க்கை எடுத்த வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு, காரில் தனியாக விட்டு செல்லப்பட்ட ஓர் 2 வயது சிறு குழந்தை துரதிரஷ்டவசமாக உயிரிழந்திருக்கின்றது.

அமெரிக்காவின் அலபாமாவில் அட்மோர் எனும் பகுதியிலேயே இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான பல்வேறு இறப்பு நிகழ்வுகள் குழைந்தைகள் சார்ந்தும், விலங்குகள் சார்ந்தும் கார்களில் அந்நாட்டில் அரங்கேறி இருக்கின்றன.

இறப்பு

ஆகையால், இதை தடுப்பதற்கென தனி விதிகளே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சிறுவர்கள் மற்றும் செல்ல பிராணிகளை காரில் தனியாக விட்டு செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே அலபாமா பகுதியில் இந்த அவல சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை கொலை குற்றமாக கருதி அவர் மீது அமெரிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஏற்கனவே குழந்தையை இழந்து தவிக்கும் அந்த நபரை மேலும் தண்டிக்கும் விதமாக இத்தகைய உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இறப்பு

வேறு யாரும் மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதே இந்த கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாக உள்ளது. இதுமாதிரியான இறப்பு நிகழ்வுகளை 'ஹாட் கார் டெத்' குறிப்பிடப்படுகின்றது. அதாவது, சூடான கார்களால் ஏற்படும் இறப்பு. இந்த நிகழ்வு மிகவும் அரிதானது. குறிப்பாக, வெயில் காலங்களில் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறும்.

ஆனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு பிப்ரவரி மாதத்தில் அரங்கேறியிருக்கின்றது. ஆகையால், இந்த ஹாட் கார் டெத் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எந்த காலத்திலும் காரில் குழந்தைகளை தனித்துவிட்டு செல்லக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இது அமைந்திருக்கின்றது.

இறப்பு

கடைசியாக இத்தகைய விபத்து சம்பவம் 1998 ஆம் ஆண்டிலேயே அரங்கேறியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடைசியாக இந்த ஆண்டின் பிப்பரவரி மாதத்திலேயே ஹாட் கார் டெத் அரங்கேறி இருக்கின்றது. இதை அடுத்து இப்போதே பல ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக சூடான காரால் இறப்பு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

கடுமையான தண்டனைக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குழந்தையின் தந்தை சுமார் எட்டு மணி நேரம் வரை அக்குழந்தையை காரில் தனித்து விட்டிருக்கின்றனர். டே-கேர் எனப்படும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் மையத்தில் விடாமல் அவர் அலட்சியமாக காரிலேயே விட்டுச் சென்றிருக்கின்றனர். இதுவே குழந்தையின் இறப்பிற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

இறப்பு

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் உஷ்ணம் ஆகிய சூழலுக்கு ஆளாகிய அந்த குழந்தை காருக்குள்ளேயே தன் உயிரை விட்டிருக்கின்றது. இந்த நிகழ்வு அமெரிக்கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த வகையான இறப்பு மிகுந்த சித்ரவதையான இறப்பிற்கு சமம் என கூறப்படுகின்றது.

இதன் காரணத்தினாலேயே குழந்தையின் தந்தைக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு இருக்கின்றது. வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் நுழைவதையே நம்மில் பலர் விரும்ப மாட்டோம். இவ்வாறு இருக்க குழைந்தையை மணிக் கணக்கில் தந்தை விட்டு சென்றிருப்பது உண்மையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

குழந்தை இறக்கும் முன் காருக்குள் 123 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் நிலவி இருக்கலாம் என கூறப்படுகின்றது. வெளிப்புறத்தில் இருப்பதைக் காட்டிலும் காருக்குள் வெப்பம் பலமடங்கு அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவேதான் வெயில் காலத்தில் காரை நிழலான பகுதி அல்லது சன் ஷேட் உள்ள பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

குழந்தை இறந்ததாகக் கூறப்படும் அந்த நாளில், சம்பவ நடைபெற்ற அந்த பகுதியில் சுமார் 80 டிகிரி வரை மட்டுமே வெப்பம் நிலவியிருக்கின்றது. இந்த மாதிரியான வெப்பநிலையில் காரை சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்தாலே அக்காருக்குள் இருக்கும் வெப்ப நிலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து விடும்.

இந்த வெப்ப நிலையில் தொடர்ச்சியாக இருக்க நேர்ந்தால் செல்கள் முதலில் பாதிப்படையும். இதற்கு பின்னர் உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய உறுப்புகளாக செயலிழக்கத் தொடங்கும். இதைத்தொடர்ந்தே மிக வேகமாக உயிரிழப்பு நேரிடும். இந்த மாதிரியான சூழலையை 2 வயதே ஆன குழந்தை அமெரிக்காவில் சந்தித்து இருக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஹாட் காரினால் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் இறக்கின்றனர். பெற்றோர்களின் கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும் இந்த நிலை அவலை நிலை அந்நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றது. 1990 இல் இருந்து இதுவரை 1,052 குழந்தைகள் ஹாட் காரால் இறந்திருக்கின்றன. மேலும், 7,300 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஹாட் காரினால் ஏற்பட்ட பக்க விளைவால் தங்களின் முக்கிய பாகங்களை இழைந்திருக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 11:58 [IST]
English summary
Kid dies due to hot car in us
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X