இந்தியா நமக்கு மட்டும்தான் ஏழை நாடு போல!.. லம்போர்கினி காரை இந்தியால எத்தன பேரு வாங்கியிருக்காங்க தெரியுமா?

பிரபல சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி (Lamborghini)இன் இந்த ஒற்றை சூப்பர் கார் மாடலை இந்தியாவில் இத்தன பேரு வாங்கி இருக்காங்களா?.. ஆச்சரியமாகதான் இருக்கு. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும். இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஹூராகேன் (Lamborghini Huracan)-ம் ஒன்று. இந்த கார் மிக அதிக எண்ணிக்கையில் நம் நாட்டில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி எத்தனை யூனிட் இந்தியாவில் விற்பனையாகி இருக்கு அப்படினுதானே கேக்குறீங்க? விற்பனைக்கு வந்ததில் இருந்து இப்போது வரை 150 யூனிட்டுகள் வரை ஹூராகேன் விற்பனையாகி உள்ளது.

Lamborghini huracan tecnica delivered in india

மிக சமீபத்திலேயே இதன் 150 வது யூனிட் இந்தியாவில் டெலிவரி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் சூப்பர் காருக்கு இந்தியாவில் இந்த அளவு வரவேற்புக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியர்கள் மத்தியில் சூப்பர் கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதை இந்த எண்ணிக்கை வெளிக்காட்டும் வகையில் அமைந்து உள்ளது.

150 யூனிட்டுகள் ஹூராகேன் டெலிவரியை லம்போர்கினி இந்தியா தற்போது வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றது. இந்த யூனிட்டு ஹூராகேனுக்கு கிடைத்திருக்கும் வெற்றியைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹூராகேன் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டிலேயே இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் இந்த ஆண்டில்தான் ஹூராகேன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதை அடுத்தே ஹூராகேனின் ஸ்பைடர் மற்றும் ரியர் வீல் டிரைவ் வெர்ஷன்கள் இந்த உலகில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. பெர்ஃபார்மண்டே 2016லும், பெர்ஃபார்மண்டே ஸ்பைடர் 2018லும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த அனைத்து வெர்ஷன்களும் உலகளவில் சாதனைகள் பலவற்றை செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக வேகம் மற்றும் பிரேக்கிங் என பலவற்றில் இந்த கார் சாதனைப் படைத்திருக்கின்றன. மேலே பார்த்த வெர்ஷன்கள் மட்டுமில்லைங்க ஹூராகேன் ஈவோ வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2019 ஆம் ஆண்டில் இதன் அறிமுகம் அரங்கேறியது குறிப்பிடத்தகுந்தது. இது, அடுத்த தலைமுறை வி10 எஞ்ஜின் கொண்ட தேர்வாகும்.

மிக சிறந்த டைனமிக்ஸ் மற்றும் ஏரோடைனமிக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட வெர்ஷனே இதுவாகும். இத்துடன், ஹூராகேன் எஸ்டிஓ (Super Trofeo Omologata) மற்றும் ஹூராகேன் டெக்னிகா ஆகிய பெயர்களிலும் தனித் திறனுடன் ஹூராகேன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2021 மற்றும் 2022 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இவை விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன.

இதுதவிர ஹூராகேன் ஸ்டெர்ரடோ எனும் ஹூராகேன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் வசதிக் கொண்ட சூப்பரான ஸ்போர்ட்ஸ் கார் இதுவாகும். இந்த காரில் வி10 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய பன்முக அவதாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பர் காரே இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே பல கோடிகள் ஆகும். எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் லம்போர்கினி ஹூராகேன் விற்கப்படுகின்றது. வெர்ஷன் மற்றும் சிறப்பு வசதிகளுக்கு ஏற்ப இதன் விலை மாறுபட்டுக் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 500 ரூபாக்கும், 200 ரூபாக்கும் நாள் முழுக்க உழைக்கக் கூடிய ஏழை-எளிய மக்கள் இருக்கக் கூடிய இந்த இந்திய நாட்டில் பல கோடி ரூபாய் விலை உள்ள லம்போர்கினி ஹூராகேன் கார் அதிகளவில் விற்பனையாகி இருப்பது ஆச்சரியமளிக்கும் வகையிலேயே உள்ளது. அதேவேளையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் இத்தகைய கார்களின் சேல்ஸ் வாயிலாக நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 22, 2023, 18:43 [IST]
English summary
Lamborghini celebrating 150th huracan delivery in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+