பணம் பத்தும் செய்யும்.. லம்போர்கினி காரில் வந்தவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா!
லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பரான சூப்பர் கார் மாடல்களில் ஒன்று ஹூராகேன். இந்த வாகனத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கு பலரின் விருப்பமான மற்றும் கனவு வாகனமாக இந்த சூப்பர் கார் இருக்கின்றது. இத்தகைய ஓர் அரிய வகை காரையே மிகவும் எளிமையான மற்றும் விலைக் குறைவான வாகனத்தை வாங்க ஒருவர் ஷோரூமிற்கு ஓட்டி வந்திருக்கின்றார்.
இந்தியாவிலேயே இந்த அரிய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அவர் ஓட்டிச் சென்றது மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் மாடல் ஆகும். விற்பனைக்கு வந்த நாள் முதல் இந்த காருக்கு மிகவும் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், சமீப சில காலமாக இந்த எஸ்யூவி காருக்கு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பலமடங்கு அதிகரித்து உள்ளது.

இதன் விளைவாகவே இந்த காருக்கு காத்திருப்பு காலமும் இருமடங்காக அதிகரித்து உள்ளது. இந்த காரை புக் செய்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இந்த மாதிரியான ஓர் காரை தனது வீட்டிற்கு ஓட்டிச் செல்லவே லம்போர்கினி ஹூராகேன் கார் உரிமையாளர் அந்த காரில் ஷோரூமிற்கு வந்திருக்கின்றார்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோவே தற்போது வாகன ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சொகுசு மற்றும் த்ரில் பயண அனுபவத்தை விரும்புபவர்கள் மத்தியில் தார் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

Source: Team BHP இப்போதைய நிலவரப்படி லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் விலை 3.22 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆக உள்ளது. இத்தகைய விலை உயர்ந்த காரிலேயே வந்து தார் காரை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஓட்டிச் சென்றிருக்கின்றார். முதலில் அவர் தார் கார் வேண்டாம் என கூறி அதை உதறி தள்ளிவிட்டு சென்றிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே மீண்டும் மஹிந்திரா ஷோரூமுக்கு வந்து தார் காரை அவர் வாங்கிச் சென்றிருக்கின்றார். முன்னதாக தாரை டெஸ்ட் டிரைவ் செய்த அவர், அதைவிட அதிகம் பிரீமியம் வசதிகள் கொண்ட கார் தேவை என கூறிவிட்டு அவர் அந்த காரை ஒதுக்கி இருக்கின்றார்.
இதற்கு அடுத்தபடியாக அவர் வாங்கலாம் என தேர்வு செய்தது, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 எஸ்யூவி ரக சொகுசு காராகும். ஆனால், இந்த காரை கைகளில் பெற 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனம் கூறி இருக்கின்றது.
அவ்வளவு நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. தனக்கு மிகவும் அவசரமாக ஓர் எஸ்யூவி கார் வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் 9 மாதங்கள் காத்திருந்தே ஆக வேண்டும் என திட்டவட்டமாக லேண்ட் ரோவர் நிர்வாகம் கூறி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே மஹிந்திரா ஷோரூமில் தன்னுடைய கோரிக்கையை அவர் முன் வைத்திருக்கின்றார்.
ஆச்சரியமளிக்கும் விதமாக பலர் வருடக் கணக்கில் காத்திருக்கின்ற சூழலில் லம்போர்கினி ஹூராகேன் உரிமையாளருக்கு இரண்டே நாட்களில் தார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக எவ்வளவு ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்பட்டது என்கிற விபரம் தெரியவில்லை. இருப்பினும், கூடுதலாக ஒரு சில லட்சங்கள் இதற்காக வசூல் செய்யப்பட்டிருக்கும் என யூகிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே டெலிவரி பெற அவர் லம்போர்கினி ஹூராகேன் காரில் வந்திருக்கின்றார். தார் காரின் எல்எக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் வசதிக் கொணஅட தேர்வையே அவர் வாங்கி இருக்கின்றார். சில கஸ்டமைசேஷன் செய்து இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார்.
எல்இடி ஹெட்லேம்ப், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், முற்றிலும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட க்ரில், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் என பல அம்சங்களை அவர் கஸ்டமைசேஷன் வாயிலாக கூடுதலாக சேர்த்திருக்கின்றார். இதனால் மஹிந்திரா தார் எஸ்யூவி வேற லெவல் ஸ்டைலுக்கு அப்கிரேட் ஆகி இருக்கின்றது.
ஆனால், இதன் எஞ்ஜின் விஷயத்தில் அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 1.5 லிட்டர் டீசல் மோட்டாரே அந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்த காரில் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் வழக்கமான பெட்ரோல் மோட்டார் தேர்வும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு சான்றாகவே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவில் தார் காரை ஆசை ஆசையாக புக் செய்துவிட்டு பல ஆயிரக் கணக்கானோர் காத்திருக்கின்ற சூழலில் இந்த செல்வந்தருக்கு மட்டும் இரண்டே நாட்களில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications