முதல் முறையா இந்தியாக்கு வந்த அதிசய கார்! விலை இத்தன கோடியா! அந்த 15 பேரை தவிர வேற யாருக்கும் தர மாட்டாங்க!

மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ (Lamborghini Huracan Sterrato) கார் முதல் முறையாக தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. லம்போர்கினி இந்தியா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லம்போர்கினி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,499 ஹூராகேன் ஸ்டெராட்டோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளது. இதில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெறும் 15 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கார்தான் தற்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த கார் இன்னும் அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்யப்படவில்லை.

Lamborghini Huracan Sterrato

கூடிய விரைவில் இது நடக்கும் என லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, இந்திய சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட 15 லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ கார்களும் விற்பனையாகி விட்டன. இதில் முதல் கார் தற்போது வந்துள்ள நிலையில், எஞ்சிய 14 கார்களும் படிப்படியாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரின் ஆரம்ப விலையே (Price) 4.61 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை தோராயமாக 5.30 கோடி ரூபாய் வரும். கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்தால், இந்த காரின் விலை இன்னும் உயர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Lamborghini Huracan Sterrato Top View

லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரில், மிகவும் சக்தி வாய்ந்த 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 600 பிஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டி விடும் திறன் இதற்கு உண்டு. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிலோ மீட்டர்களாக உள்ளது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம் என்பதால், இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கும் ஏற்றதாக இருக்கும்.

ஸ்டாண்டர்டு லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan Evo) காருடன் ஒப்பிடும்போது, லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 44 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 171 மிமீ-ஆக உயர்ந்துள்ளது. எனவே வேக தடைகள் நிறைந்த இந்திய சாலைகளில் இந்த காரை ஓட்டலாம்.

இந்திய சாலைகளில் எளிதாக ஓட்ட முடியும் என்பதால்தான் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார், இங்கு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் லம்போர்கினி உருஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர். இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் விலை உயர்ந்த ஹூராகேன் ஸ்டெராட்டோ காரை வாங்கிய 15 இந்தியர்கள் யார்? என்ற விபரத்தை லம்போர்கினி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த காரை வாங்கியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 15 லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ கார்களும் ஏற்கனவே விற்பனையாகி விட்டன. அவர்களுக்கு மட்டுமே லம்போர்கினி நிறுவனம் ஹூராகேன் ஸ்டெராட்டோ கார்களை டெலிவரி செய்யும். எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், இந்தியாவில் இனி யாராலும் இந்த காரை வாங்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2023, 15:29 [IST]
English summary
Lamborghini huracan sterrato lands in india all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+