மணிக்கு 325கிமீ வேகத்தில் போகும் லம்போர்கினி காரை வாங்கிய மர்ம நபர்.. இதோட விலையை கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

லம்போர்கினி நிறுவனம் அதன் முதல் யூனிட் ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica)-வை இந்திய சந்தையில் டெலிவரி கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் அடுத்த தலைமுறை பின் வீல் இயக்கம் கொண்ட அதிக வேகத்தில் செல்லும் சூப்பர் கார் ரக வாகனம் ஆகும்.

இதனை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே லம்போர்கினி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது விற்பனைக்கு வந்து ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் இப்போதே லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகாவின் முதல் யூனிட் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றது.

Indias first lamborghini hurcan tecnica delivered

மேலும், காரை வாங்கிய இந்தியருக்கு லம்போர்கினி நிறுவனம் அதனை டெலிவரி கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை லம்போர்கினி நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகாவின் விலை ரூ. 4.04 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய மிக உச்சபட்ச விலைக் கொண்ட காரையே இந்தியர் ஒருவர் தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் அந்த நபர், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விபரங்களை லம்போர்கினி நிறுவனம் வெளியிடப்படவில்லை. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா ஈவோ மற்றும் எஸ்டிஓ ஆகிய இரு மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

Indias first lamborghini hurcan tecnica front view

ஹூராகேன் எஸ்டிஓ மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே புதிய ஹூராகேன் டெக்னிகாவிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி10 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 640 எச்பி பவரையும், 565 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஏற்கனவே கூறியதைப் போல் இது ஓர் பின் வீல் இயக்கம் கொண்ட சூப்பர் காராகும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரன்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே காரை மணிக்கு 325 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தில் ஓட வைக்கின்றது.

Indias first lamborghini hurcan tecnica side view

இதுமட்டுமில்லைங்க இந்த கார் கண்ணிமைக்கும் நேரத்திலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். 3.2 செகண்டுகளில் இந்த திறனை அது தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், 9.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தையும் அது எட்டும்.

இத்தகைய மின்னல் வேகத்தில் பயணிக்கும் காரையே இந்தியர் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த கார் இதுபோன்று உச்சபட்ச வேகங்களை எட்டுவதற்கு அதன் எஞ்ஜின் மட்டுமே காரணமல்ல. குறைவான எடை மற்றும் மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

Indias first lamborghini hurcan tecnica rear view

ஹூராகேன் டெக்னிகா காரின் இலகுவான எடைக்காக கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை அதிக உறுதியானவை, அதேநேரத்தில் எடை குறைவானவை. எஞ்ஜினுடன் சேர்த்து காரின் ஒட்டுமொத்த எடையே 1,379 கிலோவாக மட்டுமே இருக்கின்றது. இந்த கார் தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகளிலும் நம்மை மிரள வைக்கும் வகையிலேயே தயார் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போதே மிக அதிக அளவில் சொகுசு மற்றும் சூப்பர் கார் வகை வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது இந்தியர் ஒருவர் ரூ. 4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகாவை வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 16, 2023, 8:45 [IST]
English summary
Lamborghini huracan tecnica first unit delivered in india price engine details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X