ஹைபிரிட் கார்களை மட்டுமே விற்பனை செய்யப்போவதாக முடிவெடுத்த லம்போர்கினி! இனி அதுக்கு மவுசு கம்மியாகிடும்!

இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் லம்போர்கினி, இந்தியாவில் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட கார்களை கம்பிளீட் பில்டுகாராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு எனத் தனி மவுசு இருப்பதால் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர். அதிக விலை காரணமாகக் குறைவான மக்களே இந்த காரை வாங்கும் பணம் கொண்ட மக்களாக உள்ளனர்.

லம்போர்கினி நிறுவனம் இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டுமே தற்போது விற்பனையைச் செய்து வருகிறது. விரைவில் டயர்1 மற்றும் டயர் 2 நிறுவனங்களில் தனது விற்பனையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்தியாவில் இனி விற்பனை செய்யப்போகும் கார்களை ஹைபிரிட் கார்களாக மாற்ற முடிவு செய்துள்ளது.

ஹைபிரிட் கார்களை மட்டுமே விற்பனை செய்யப்போவதாக முடிவெடுத்த லம்போர்கினி! இனி அதுக்கு மவுசு கம்மியாகிடும்!

இது குறித்து லம்போர்கினி இந்தியத் தலைவர் ஷாரத் அகர்வால் கூறும் போது இந்தாண்டு இந்தியாவிற்காக முதல் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். வரும் ஏப்ரல் மாதம் லம்போர்கினி உரூஸஅ எஸ் சூப்பர் எஸ்யூவி காரை தற்போது விற்பனையாகி வரும் உரூஸ் காருக்கு பதிலாக மாற்றுகிறோம் என கூறினார்.

மேலும் படிப்படியாக அனைத்து கார்களையும் ஹைபிரிட் ஆக்கும் முயற்சி தொடர்ந்து நடக்கும் எனவும் முதற்கட்டமாக வி12 இன்ஜின் கொண்ட கார்களை ஹைபிரிட் கார்களாக மாற்றவும், பின்னர் வி10 இன்ஜின் கொண்ட கார்களை ஹைபிரிட் கார்களாக மாற்றவும் முடிவு செய்துள்ளோம். இந்த பணியை வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஏப்ரல் மாதம் அறிமுகமாகப்போகும் லாம்போர்கினி உரூஸ் எஸ் சூப்பர் எஸ்யூவி கார் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் அறிமுகமாகிவிட்டது. இதன் ஹைபிரிட் வெர்ஷனும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைபிரிட் பிளக் இன் ஹைபிரிட் காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே போர்ஷே கேயென்னி டர்போ எஸ் இ-ஹைபிரிட் கார், பிளக் இன் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி நிறுவனம் இந்த ஹைபிரிட் தொழிற்நுட்பத்திற்கு மாறுவது கார்பன் ஃபூட் பிரிண்ட்களை குறைப்பதற்கான முயற்சி தான். இதற்கிடையில் இந்நிறுவனம் முழு எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது வரும் 2028ம் ஆண்டு அறிமுகமாகும் எனத் தெரிகிறது. வரும் 2025ம் ஆண்டு இந்நிறுவனம் தனது கார்களால் ஏற்படும் கார்பன் ஃபூட் பிரிண்ட்களை 50 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லம்போர்கினி நிறுவத்தின் உரூஸ் சூப்பர் எஸ்யூவி காரை பொருத்தவரை அதிக பெர்ஃபாமென்ஸ் அடிப்படையிலான கார். ஹூராக்கேன் மற்றும் அவென்டேட்டார் காரை போலச் சிறப்பாக ஃபெர்பாமென்ஸ் செய்யும் கார். லம்போர்கினியை பொருத்தவரை உரூஸ் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 92 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 2021ம் ஒப்பிடும்போது 33 சதவீதம் அதிகம்.

லாம்போர்கினி நிறுவனத்தைப் பொருத்தவரை இந்தியாவில் அதன் குறைந்த பட்ச காரின் விலை ரூ3 கோடியாகும். லம்போர்கினி நிறுவனம் இந்தியா அரசு கார்கள் இறக்குமதி மீதான வரியை குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. தற்போது அதன் கார்களுக்கு 100 சதவீத வரியை விதிக்கிறது. இதனால் கார்கள் இந்தியாவிற்கு வரும் போது இரண்டு மடங்காக அதன் விலை இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 9:21 [IST]
English summary
Lamborghini india plans to go full hybrid lineup know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+