1000 குதிரைகள் சேர்த்து இழுத்தாலும் இதை அசைக்க முடியாது! லாம்போர்கினி தயாரித்துள்ள அதிசய கார் இன்ஜின்...
இத்தாலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் லாம்போர்கினி. இந்நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் கார்கள் உலகம் முழுவதும் பிரபலம் பலர் இந்நிறுவனம் தயாரிக்கும் காரில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்பதையே கனவாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் லாம்போர்கினி நிறுவனம் புதிய தலைமுறை கார்களை தயாரித்து வருகிறது.
லாம்போர்கினி நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தலைமுறை காருக்கு எல்பி744 என பெயரிட்டுள்ளது. இது அவன்டேடார் காருக்கு அடுத்த மாடலாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் லாம்போர்கினிநிறுவனம் 6.5 லிட்டர் வி12 இன்ஜின் 3 எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் லாம்போர்கினி நிறுவனம் தனது இன்ஜினை மாற்ற முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் பயன்படுத்தி வரும் வி12 இன்ஜின் மாசுக் கட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு இல்லாததால் புதிய ஹைபிரிட் இன்ஜின் செட்டப்பை உருவாக்கியுள்ளது.
அதற்காக தனது புதிய வி12 இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார்களையும் இணைத்துள்ளது. இது 1000 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த செட்டப் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டது. இந்த இன்ஜின் இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வி12 இன்ஜின் தற்போது அவென்டேடார் காரில் உள்ள இன்ஜினை விட எடை குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய இன்ஜினே 218 கிலோ எடை கொண்டதாக இது இருக்கிறது. இது தற்போது உள்ள வி12 இன்ஜின் விட 17 கிலோ எடை குறைவு. இன்ஜின் சிறியதாக இருந்தாலும் இதன் பவர் மிக அதிகம்.
இந்த வி12 இன்ஜின் 814 பிஎச்பி பவரை 9250 ஆர்பிஎம்மிலும் 726 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த இன்ஜின் உடன் 3 எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் செட்டப் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து மொத்தம் 1015 சிவி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின பழைய வி12 இன்ஜினை விட 30 சதவீதம் குறைவான பவரையே வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த காரில் எலெக்ட்ரிக் மோட்டார் செயல்பட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக கியர்பாக்ஸ் டனல் பகுதியில் 3.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பேட்டரி எடை அதிகமாக இருந்தால் சென்டர் ஆஃப் கிராவிட்டி சரியாக இருக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 7 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 30 நிமிடத்தில் 0-100 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்துவிடும்.
இது மட்டுமல்ல இந்த பேட்டரியை பெட்ரோல் இன்ஜின் மூலமும் ரீஜெனரேட்டிவ் மூலமும் சார்ஜ் செய்ய முடியும். நேரடியாக பெட்ரோல் இன்ஜின் மூலம் சார்ஜ் செய்தால் 6 நிமிடத்திலேயே பேட்டரியை சார்ஜ் செய்துவிடலாம். இந்த காரில் உள்ள 3 எலெக்ட்ரிக் மோட்டார்கள் 350
என்எம் டார்க் திறனை உடனடியாக வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த வி12 இன்ஜின் கொண்ட கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டது. இந்த கார் முழுமையாக எலெக்ட்ரிக் மோடிலும் இயங்கும் திறன் கொண்டது. முழு எலெக்ட்ரிக் மோடில் போட்டலா் அதில் உள்ள 3.8 கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 10-12 கி.மீ வரை ரேஞ்ச் தரும்.
லாம்போர்கினி நிறுவனம் இந்த வி12 இன்ஜினை 180 டிகிரி மாற்றியமைத்து செட்டப் செய்யவுள்ளது. இந்த இன்ஜின் புதிய 8 ஸ்பீடு டுயல் கிளட்ச் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த சிஸ்டம் 193 கிலோ எடை கொண்டது. இது முந்தைய தலைமுறையில் இருந்த டிஎஸ்ஜி கியர் தொழிற்நுட்பத்தை விட சிறப்பாக செயல்படுகிறது. 180 டிகி மாற்றியமைப்பதால் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு அதிக இடம் கிடைக்கிறது. இந்த இன்ஜின் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








