Lamborghini Revuelto 350 கிமீ ஸ்பீடுல சும்மா சீறிப் பாயும்; இதெல்லாம் கண்ணுல பார்க்கவே கொடுத்து வச்சிருக்கனும்
லம்போர்கினி நிறுவனத்தின் அவென்டேட்டர் கார் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான கார் இந்நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை நிறுத்திவிட்டு இதற்குப் பதிலாக ரிவோல்டோ காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற கட்டமைப்பு சேஸில் பவர்டெரன் எல்லாம் புதியது தான். இதைப்பற்றி விரிவாகக் காணலாம்.
லம்போர்கினி இந்த ரிவோல்டோ காரில் அதன் ஐகானிக் எட்ஜி டிசைனை கையாண்டுள்ளது. இந்த காரில் அந்நிறுவனம் தனது நேரச்சுரலி அஸ்பயர்டு வி12 இன்ஜினை பிளக் இன் ஹைபிரிட் சிஸ்டத்துடன் 3 எலெக்ட்ரிக் மோட்டாரையும் சேர்த்து வழங்கியுள்ளது.

இந்த லம்போர்கினி ரிவோல்டோ காரை பொருத்தவரை 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 813 பிஎச்பி பவரை 9250 ஆர்பிஎம்மிலும், 725 என்எம் டார்க் திறனை 6750 ஆர்பிஎம்மபிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 9500 ஆர்பிஎம் வரை சீறி பாயும் திறன் கொண்டது.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள புதிய வி12 இன்ஜின் அவென்டேட்டார் இன்ஜினை விட 17 கிலோ குறைவாக வெறும் 218 கிலோ எடையில் தான் இருக்கிறது. இந்த
இன்ஜின் புதிய 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கம்பஷன் இன்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 3 எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. 2 மோட்டார் முன்பக்க ஆக்ஸிலிலும், ஒரு கியர் பாக்ஸ் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லம்போர்கினி ரிவோல்ட் கார் ஆல்வீல் டிரைவ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வழக்கமா ரிவர்ஸ் கியர் தொழிற்நுட்பம் இல்லை. மாறாக முன் வீலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்களே ரிவர்ஸ் கியருக்கு பயன்படுகிறது. அது டார்க்வெக்டாரிங்கிற்கும் பயன்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு பவர் கொடுக்க 3.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது சென்டர் கன்சோலுக்கு இடையே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள மோட்டார் ஸ்டார்ட்டர் மோட்டார் மற்றும் ஜெனரேட்டாராக வேலை செய்கிறது. இந்த பேட்டரி பேக்கை 7 கிலோ வாட் சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்ய முடியும்.

இந்த பேட்டரி பேக் வெறும் 30 நொடிகளில் சார்ஜ் ஏறிவிடுகிறது. வி12 இன்ஜினை வைத்து சார்ஜ் ஏற்றினால் வெறும் 6 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும். இந்த கார் கம்பஷன் இன்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் பவர் சேர்த்து மொத்தம் 1,015 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த கார் அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் சிறீ பாயும் தன்மை கொண்டது. இது மட்டுமல்ல 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.5 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். டிசைனை பொருத்தவரை இந்த ரிவோல்டோ கார் லோ-ஸ்லாங்க் அக்ரஷிவ் ஸ்டான்ஸில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்பக்கத்தில் பல Y எலெமென்ட்கள் உள்ளன. இது போக எல்இடி டே டைடம் ரன்னிங் லைட், அலா் வீல்கள், ஏர் இன்டேக் மற்றும் எல்இடி டெயில்லைட் ஆகியன இதில் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் இந்த காரில் இன்ஜின் கவர் கிடையாது. இதனால் எளிதாக இந்த காரில் உள்ள வி12 இன்ஜினை மற்றவர்கள் பார்க்க முடியும்.
இந்த காரின் இன்டீரியர் ரெட்ஒன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மல்டி ஃபங்ஷன் ஸ்டிரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 13 டிரைவிங் மோட்கள் உள்ளன. இந்த காரின் உட்புறமும் Y எலெமென்ட்கள் உள்ளன. இந்த காரில் 3 ஸ்கிரீன் உள்ளன. ஒன்று டிரைவருக்கான தகவல்கள், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கடைசியாக முன்பக்க பயணிக்கான ஒரு ஸ்கிரீனும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








