ஆட்டோ மீது மோதினதுக்கே இத்தன லட்சம் செலவு வச்சிருச்சா! இத சௌந்தர்யா ரஜினிகாந்த் கண்கள்ல படாம பாத்துக்கோங்க..

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் லம்போர்கினி உருஸ்-ம் ஒன்று. இந்த காரே ஆட்டோ உடன் மோதலைச் சந்தித்து இருக்கின்றது. இந்த மோதலில் மிக மிகக் கடுமையான சேதத்தை லம்போர்கினி உருஸ் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோதலில் ஓர் கார் அதிக சேதத்தைச் சந்திப்பது புதிதல்ல. மேலும், அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. ஆனால், ஆட்டோ உடனான மோதலுக்கு அக்கார் பல லட்சங்களைச் செலவழிக்கும் அளவிற்கு சேதத்தைச் சந்தித்து இருப்பதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

Lamborghini urus hits autorickshaw

குறிப்பாக, இந்திய நடிகர்களுக்கு இந்த தகவல் பேரிடியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த கார் மாடலை தொழிலதிபர்களைக் காட்டிலும் அதிகம் திரை நட்சத்திரங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களே பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் அவர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என நாங்கள் கூறி உள்ளோம்.

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் இடத்தில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தலை நகர் டெல்லியில் உள்ள சிரக் தில்லி எனும் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த விபத்தில் லம்போர்கினி உருஸ் காருக்கு மட்டுமல்ல ஆட்டோவிற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

Auto damage due to urus hit

ஆட்டோவில் பயணித்த பயணி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லம்போர்கினி உருஸ் காரில் வந்தவர் ரஜ்பிர் சர்தனா (வயது 21) என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர் நண்பர்களுடனான பார்ட்டியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போதே இந்த விபத்து சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றார்.

அதிர்ஷ்டவசமாக ரஜ்பிர் சர்தனா இந்த விபத்தில் காயங்களில் இன்றி தப்பி இருக்கின்றார். அதற்கு லம்போர்கினி உருஸ் காரில் இடம் பெற்றிருக்கும் சொகுசு வசதிகளே முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், அவருடைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் இந்த விபத்தில் இருந்த தப்பிக்கவில்லை. காரின் இடது பக்கம் முழுமையாக சேதமடைந்திருக்கின்றது.

Lamborghini urus accident spot

இந்த சேதத்தை சரி செய்ய எப்படியும் பத்து லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டு இருக்கின்றது. இந்த விபத்திற்கு காரின் அதிக வேகமும், மழையுமே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. லம்போர்கினி உருஸ் உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய ஓர் எஸ்யூவி ரக காராகும்.

இந்த திறனே அதனை விபத்தில் சிக்க வைத்து இருக்கின்றது. அதிக வேகத்தில் இயங்கும் கார்கள் நகர பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த கருத்தை உண்மையாக்கும் வகையிலேயே இப்போதைய டெல்லி விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

Lambo urus hit auto

லம்போர்கினி உருஸ் சிங்கிள் ஆக்சலரேஷனிலேயே மணிக்கு நூறு கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் சூப்பர் கார்கள் நகர பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல கூறப்படுகின்றது. இருப்பினும் செல்வந்தர்கள் பலர் சூப்பர் கார்களை நகர்புற சாலையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அனைத்து சூப்பர் கார் பயன்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் உறைய செய்யும் வகையில் டெல்லியில் லம்போர்கினி உருஸ் கார் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த விபத்தில் இடது பக்க ஃபெண்டர், பம்பர் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவை சேதமடைந்திருக்கின்றன. ஆட்டோவின் பின் பக்கமும் கடுமையான சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது.

இதை சரி செய்ய அந்த ஓட்டுநருக்கு கட்டாயம் ஒரு சில ஆயிரங்கள் செலவாகும். லம்போர்கினி உருஸை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தாரா என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், அவரை கை செய்த போலீஸார் உடனடியாக அவரை விடுவித்தனர். இது ஓர் பெயிலபிள் குற்றம் என்பதால் அப்போதே அவரை காவல்துறை விடுவித்ததாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக சொகுசு காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 3.5 கோடி ஆகும். இது இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4 கோடியைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சொகுசு காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரால் மணிக்கு 306 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மேலும், இதனால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய அதிக வேகத்தில் இயங்கும் காரே உருஸ் ஆகும். இதுவே தற்போது ஆட்டோ உடன் சந்தித்த மோதலில் பெருத்த சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்தை ஏற்படுத்திய லம்போர்கினி உருஸ் கார் ஓட்டுநரை காவல்துறை உடனடியாக விடுவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஓர் வாடகை கார் ஓட்டுநர் அல்லது வேறு ஏதேனும் சாமானியர் இதை செய்திருந்தாலும் காவல்துறை இவ்வாறே நடந்துக் கொண்டிருக்குமா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 21:04 [IST]
English summary
Lamborghini urus hits autorickshaw in delhi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X