கோடி கணக்குல காசு இருந்தாலும் இன்னும் 2 வருசத்துக்கு இந்த கார்களை வாங்க முடியாது! ஏன் தெரியுமா?
லம்போர்கினி நிறுவனத்தின் ரெவல்டோ என்ற பிளக்-இன் ஹைபிரிட் சூப்பர் காருக்கான புக்கிங் வரும் 2025 ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் வின்கில்மென் தெரிவித்துள்ளார். ரெவல்டோ மட்டுமல்லாமல் ஹூராக்கேன் மற்றும் உரூஸ் ஆகிய கார்களுக்கான புக்கிங்கும் வரும் 2025 ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இத்தாலியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் லம்போர்கினி. இந்நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் கார்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களை வாங்க உலகில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தின் கார்களின் விலை உயர்வாக இருந்தாலும் அது தனக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்தை தருவதால் இதை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் லம்போர்கினி நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் வின்கெல்மென் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் லம்போர்கினி நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைபிரிட் காரான ரெவல்டோ காருக்கான அடுத்த 18 மாதங்களுக்கு அதாவது 2025ம் ஆண்டு இறுதி வரை புக்கிங் முழுவதுமாக முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது அடுத்த 18 மாதங்கள் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களை ஏற்கனவே பலர் வாங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இப்பொழுது புதிதாக நீங்கள் அந்த காரை வாங்க புக்கிங் செய்தால் அந்தக் கார் 18 மாதத்திற்கு பிறகு தான் தயாரித்து பின்னர் விற்பனைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த லம்போர்கினி நிறுவனத்தின் இந்த ஹைபிரிட் சூப்பர் காருக்கான அதிகமான டிமெண்ட் இப்பொழுது மட்டுமல்ல இதற்கு முன்னரும் இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரெவல்டோ கார் அவென்டேடார் காரின் விற்பனையை வீழ்த்தும் அளவிற்கு புக்கிங் நடந்துள்ளது. அவென்டேடார் காரை பொருத்தவரை 11 ஆண்டுகளில் 11,465 கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன.
ஆனால் இந்த ரெவல்டோ காரின் புக்கிங் எண்ணிக்கை தற்போது அந்த 11,000 என்ற எண்ணிக்கையை ,தாண்டி விட்டது. இந்த ரெவல்டோ கார் அமெரிக்காவில் தான் மிக அதிக அளவில் புக்கிங் ஆகியுள்ளது. ஏகப்பட்ட மக்கள் இந்த காரை விரும்பி புக்கிங் செய்து வருகின்றனர். அதிகமான எண்ணிக்கையில் இந்த காரை இனி நாம் ரோட்டில் காணலாம்.

லம்போர்கினி ரெவல்டோ காரை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் ஒரு முக்கியமான தயாரிப்பாக இருக்கிறது. இந்தக் காரில் எலெக்ட்ரிஃபைடு பிளக்கின் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு வி2 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் சேர்ந்து மொத்தம் 1001 எச்பி பவரை வெளிப்படுத்துகிறது.
தற்போது லம்போர்கினி நிறுவனத்தின் உரூஸ் மட்டும் ஹூராக்கேன் ஆகிய கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருவதாக நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். ரெவல்டோ கார் போல உரூஸ் மற்றும் ஹூராக்கேன் ஆகிய கார்களுக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான லைன் அப் ஏற்கனவே புக் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
லம்போர்கினி நிறுவனத்தின் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் லம்போர்கினி நிறுவனம் தனது உற்பத்தி திறனை தற்போது அதிகரித்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் லம்போர்கினி நிறுவனம் மொத்தம் 5341 கார்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. இது கடந்த மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது ஐந்து சதவீதம் அதிகமாகும்.
லம்போர்கினி நிறுவனம் தற்போது பிளக்கின் ஹைபிரிட் கார்களின் அதிகம் கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது தன் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையில் இருக்கும் லம்போர்கினி உருஸ் மற்றும் ஹராயின் ஆகிய கார்களின் பிளக்கிங் ஹைபிரிட் வர்ஷனை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி நிறுவனத்தின் கார்களுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய மவுசு இருக்கிறது பலர் இந்த காரை வாங்க வேண்டும் என தீவிர ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் லம்போர்கினி நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது இதனால் ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை முன்பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து லம்போர்கினி தனது ஹைபிரிட் வெர்ஷனை மேம்படுத்தினால் அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









