யப்போ இவ்ளோ விலையா! இந்த காரை வாங்குற காசுல மினி அரண்மனையையே கட்டி எழுப்பிடலாம்போல.. அப்படி என்ன விலை?
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லெக்சஸ் (Lexus) மிக அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது. அது நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான எல்சி500எச் (LC500h)-இன் ஸ்பெஷல் எடிசன் ஆகும்.
நிறுவனத்தின் புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக எல்சி 500எச் (LC 500h) இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பையே நிறுவனம் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எல்சி 500எச் லிமிடெட் எடிசன் (LC500h Limited Edition) எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த சிறப்பு பதிப்பை மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. வழக்கமான எல்சி500 எச் மாடலைக் காட்டிலும் மிக மிகக் கவர்ச்சியான ஒன்றாகவே தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் சிறப்பு பதிப்பு இருக்கின்றது. உள் மற்றும் வெளிப்புறம் என இரண்டையும் மிகவும் கவர்ச்சியான நிலைக்கு லெக்சஸ் அப்கிரேட் செய்திருக்கின்றது.
இதனாலேயே இதற்கு மிக மிக அதிக விலையை லெக்சஸ் நிர்ணயித்து இருக்கின்றது. ரூ. 2.50 கோடியே இதற்கு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் மினி கோட்டையையே கட்டிவிடலாம் என நினைக்கத் தோன்றுகின்றதா..
ஸ்பெஷல் நிறங்களைக் கொண்டே இந்த காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கத்தை நிர்ணயம் அலங்கரித்து இருக்கின்றது. ஆனால், இந்த காரின் மெக்கானிக்கல் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹகுகின் எனும் வெள்ளை நிற ஷேடையே இந்த காரை அலங்கரிக்கும் விதமாக லெக்சஸ் பயன்படுத்தி இருக்கின்றது.
இதன் உட்புறத்தில் முற்றிலும் மாறுபட்ட பிரீமியம் நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கச்சி-ப்ளூ நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, காரின் கவர்ச்சி தோற்றத்தை மெருகேற்றும் விதமாக கருப்பு நிற அணிகலன்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனை முன் பக்க கிரில் மற்றும் ரியர் டிஃப்யூசரில் பார்க்க முடியும்.
இதுதவிர, இந்த சிறப்பு பதிப்பில் 21 அங்குல வீல்ககள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதே அளவுள்ள வீலே வழக்கமான எல்சி500எச் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அழகு எனும் விஷயத்தில் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் தென்படுகின்றது. இதற்கு காரணம், வீலிலும் கருப்பு நிறத்தையே லெக்சஸ் பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த காரின் உட்பக்கத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் லெக்சஸ் எல்சி லிமிடெட் எடிசன் எனும் பேட்ஜ் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோல அலங்கரிப்பு விஷயங்களில் மட்டுமே எல்சி500எச் லிமிடெட் எடிசன் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஆனால், மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
3.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி6 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் செல்ஃப் சார்ஜிங் வசதிக் கொண்ட ஹைபிரிட் சிஸ்டம் ஆகும். இதன் பெட்ரோல் மோட்டார் 300 எச்பி மற்றும் 348 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மின்சார மோட்டார் 180 எச்பி மற்றும் 330 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் சொகுசான ரைடை விரும்புவோர்கள் மத்தியில் லெக்சஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாகவும், வரும் பண்டிகை நாட்களை ஸ்பெஷலானதாக மாற்றும் நோக்கிலும் லெக்சஸ் புதிய சிறப்பு பதிப்பு காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








