எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கார்கள் தான் இருக்கும்போல!! ஆட்டோ எக்ஸ்போவை மெர்சலாக்கிய லெக்ஸஸ்...

லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட லெக்ஸஸ் இந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இரு கான்செப்ட் கார்களை காட்சிக்கு நிறுத்தியுள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2023 ஆட்டோ எக்ஸ்போவில் லெக்ஸஸின் பெவலியனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரு கான்செப்ட் வாகனங்கள் எல்.எஃப்-30 மற்றும் எல்.எஃப்-இசட் ஆகும். இவை இரண்டும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு பயன்படக்கூடிய கான்செப்ட் மாதிரிகள் ஆகும். இந்த கான்செப்ட் மாதிரிகளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவை இரண்டும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டங்களை கொண்டவை ஆகும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கார்கள் தான் இருக்கும்போல!!

அதாவது, இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் இயக்க ஆற்றல் ஆனது ஒரே நேரத்தில் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும். இத்தகைய அம்சமானது தற்போதைய எரிபொருள் என்ஜின் கார்களில் சற்று விலைமிக்க வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வகையில் பார்க்கும்போது, ஆல்-வீல்-டிரைவ் ஆனது எதிர்கால கார்களில் வாடிக்கையான ஒன்றாக மாறிவிடும் என்பது தெளிவாகிறது.

2023 ஆட்டோ எக்ஸ்போவில் லெக்ஸஸின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரு கான்செப்ட் வாகனங்களில் எல்.எஃப்-இசட் ஆனது முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என 2 எலக்ட்ரிக் மோட்டார்களை கொண்டுள்ளது. இவ்வாறு எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பை கொண்ட எலக்ட்ரிக் கார்கள் தற்சமயம் சற்று விலைமிக்கவைகளாகவும், அரிதாகவும் தான் இருக்கின்றன. எல்.எஃப்-இசட் இப்படி இருக்க, எல்.எஃப்-30 ஆனது அதனை காட்டிலும் அட்வான்ஸானதாக உள்ளது.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கார்கள் தான் இருக்கும்போல!!

ஏனெனில் எல்.எஃப்-30 கான்செப்ட் மாதிரியில் ஒவ்வொரு 4 சக்கரங்களுக்கும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. உட்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், எல்.எஃப்-30 கான்செப்ட்டின் உட்புற கேபின் ஆனது லெக்ஸஸின் டாஸுனா கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, எல்.எஃப்-30 கான்செப்ட்டின் உட்பக்கம் ஓட்டுனர் மிக மிக சவுகரியமாக செயல்படும் வகையில் விசாலமான இடவசதியை கொண்டதாக காட்சியளிக்கிறது.

ஓட்டுனருக்கு அருகே அமரும் முன் இருக்கை பயணிக்கான இருக்கை ஆனது விமானங்களில் ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கை போன்று உள்ளது. அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், இருக்கைகள் திரவம் ஊற்றி வைக்கப்பட்ட பைகள் போன்று காட்சியளிக்கின்றன. எல்.எஃப்-30 கான்செப்ட்டின் பின் இருக்கைகள் செயற்கையான மஸல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ எக்ஸ்போவில் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கார்கள் தான் இருக்கும்போல!!

ஏற்கனவே கூறியதுபோல் இந்த கான்செப்ட் காரில் மொத்தம் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் சக்கரத்திற்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 544 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம் என லெக்ஸஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. எல்.எஃப்-30 கான்செப்ட்டின் டாப்-ஸ்பீடு மணிக்கு 200கிமீ தான் என்றாலும், இந்த கான்செப்ட் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கார்கள் தான் இருக்கும்போல!!

மறுப்பக்கம், எல்.எஃப்-இசட் கான்செப்ட் மாதிரியும் லெக்ஸஸின் டாஸுனா கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். எல்.எஃப்-30 கான்செப்ட்டை போன்று இந்த கான்செப்ட் மாதிரியிலும் வெளிப்புற இரைச்சலை தடுத்து ஒலியினை வழங்கக்கூடிய மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலமாக அதிகப்பட்சமாக 544 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 21:27 [IST]
English summary
Lexus lf z and lf 30 concept vehicles revealed at auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X