குட்டி ஃப்ரிட்ஜ், டிவி என லெக்சஸின் இந்த கார் அசத்துது! எவ்ளோ தூர பயணமா இருந்தாலும் ஜாலியா போய்ட்டு வந்திடலாம்
ஆட்டோ எக்ஸ்போ 2023இல் லெக்சஸ் நிறுவனம் அதிக சொகுசு வசதிகள் கொண்ட எல்எம் 300எச் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும், இதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
லெக்சஸ் நிறுவனம் அதன் எல்எம் 350எச் (Lexus LM 300h) லக்சூரி எம்பிவி ரக காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. வெகு விரைவில் இந்த காரை லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியீட்டின்போதே உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் இறுதி அல்லது அதற்கு பின்னர் லெக்சஸ் எல்எம் 300எச் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா வெல்ஃபையரையே மிஞ்சிரும்
டொயோட்டா வெல்ஃபையர் காரை போல் அதிக லக்சூரி மற்றும் சிறப்பு வசதிகள் நிறைந்த காராக இதனை லெக்சஸ் வடிவமைத்திருக்கின்றது. சொல்லப்போனால் இதைவிட அதிக லக்சூரி அம்சங்கள் கொண்ட வாகனமாகவே லெக்சஸ் எல்எம் 300எச் காரை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எல்எம் 350எச் காரில் ஹைபிரிட் அம்சம் வழங்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் எல்எம் 300எச் மாடலில் ஹைபிரிட் அம்சம் இடம் பெறும்.
மின்சாரம் பெட்ரோல் ரெண்டுத்துலையுமே ஓடும்
அதாவது, பெட்ரோல்- மின்சாரத்தில் இயங்கும் வசதியுடன் விற்பனைக்கு வரும். 143 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே இந்த வாகனத்தில் லெக்சஸ் வழங்க இருக்கின்றது. இத்துடன், 150 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரும் எல்எம் 300எச் காரில் இடம் பெறும். முன்பக்கத்தில் இருக்கும் அனைத்து ஆக்ஸில்களிலும் மின்சார மோட்டார் இடம் பொருத்தப்பட்டிருக்கும். இ-சிவிடி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டார்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் இந்த சொகுசு கார் 3.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் அது விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. லெக்சஸ் நிறுவனம் இந்த காரை மட்டுமில்லைங்க இன்னும் சில கார் மாடல்களையும் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், எல்எஃப் 30 மற்றும் எல்எஃப் இசட் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது.
இன்னும் சில கார்களையும் விற்பனைக்குக் கொண்டு வர போறாங்க
இவை இரண்டும் கான்செப்ட் மாடல்களாகும். இவற்றுடன் சேர்த்து ஆர்எக்ஸ் எனும் மாடலையும் அது காட்சிப்படுத்தியது. இந்த காரையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை லெக்சஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே எல்எம் 300எச் காரின் வருகையையும் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த காரை டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி காருக்கு போட்டியாக இந்தியசந்தையில் களமிறக்கப்பட இருக்கின்றது.

ஆகையால், அந்த காரைவிட சற்று அதிகப்படியான கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாங்கியதாக அது காட்சியளிக்கின்றது. பாக்ஸி தோற்றம், அட்டகாசமான கிரில், கண்களைக் கவரக் கூடிய ஹெட்லைட் அமைப்பு மற்றும் எல் வடிவ டிஆர்எல்கள் உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், எல் வடிவ பனி மின் விளக்கும் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை சுற்றிலும் குரோம் பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
சிறப்பம்சங்கள்
மோட்டார் மற்றும் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றில் எப்படி இந்த கார் பிறரை கவரக் கூடியதாகக் இருக்கின்றதோ, அதேபோல், காரின் உட்பக்க விஷயத்திலும் அனைவரையும் கவரக் கூடிய லெக்சஸ் எல்எம் 300எச் இருக்கின்றது. மஇது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட காராகும். முன்னிருக்கை இரண்டும் பின்பக்கத்தில் இருந்து தனித்திருப்பதைபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இதன் இரண்டாம் வரிசை இருக்கையில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
ஆனால், கடைசி வரிசையில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்ற வகையில் கேப்டைன் ரக இருக்கை வழங்கப்பட்டுள்ளது. மிக மிக அதிக சொகுசான பயணத்தை விரும்புவோர்க்கு ஏதுவாக கடைசி இரு இருக்கைக்கு அதிக வசதிகளை லெக்சஸ் வாரி வழங்கி இருக்கின்றது. தனி திரை, ஆடி கன்ட்ரோல் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 26 அங்குல திரையே வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஃப்ரிட்ஜ், குடைகளை வைக்கும் இடம் என எக்கசக்க அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூப்பரான காரையே விரைவில் லெக்சஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








