Lexus LM மினிவேன் வெளியீடு... மன்னரைபோல ஊரை வலம் வர ஏத்த வாகனம்.. இதுக்கு முன்னாடி க்ரூஸ் கப்பலே தோத்திடும்!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ் (Lexus), எல்எம் (LM) எனும் புதிய வாகனத்தை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் கார் உருவம் கொண்ட மினி வேன் ஆகும். அதிக சொகுசான பயணத்தை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை லெக்சஸ் வடிவமைத்திருக்கின்றது.

4, 6 மற்றும் 7 ஆகிய இருக்கைகள் தேர்வில் இந்த மினி வேனை 2024 ஆம் ஆண்டில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும். ஆமாங்க, இது 2024ம் ஆண்டிற்கான சொகுசு மினி வேன் ஆகும். தற்போது நடைபெற்று வரும் 2023 ஷாங்காய் மோட்டார் ஷோ-விலேயே இந்த மினி வேனை லெக்சஸ் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

Lexus lm

இதன் 4 சீட்டர் வெர்ஷன் இரு வரிசை இருக்கை அமைப்பிலும், மற்ற 6 மற்றும் 7 சீட்டர் வெர்ஷன்கள் 3 வரிசை இருக்கை அமைப்பிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், மிக மிக அதிக சொகுசு வசதியை விரும்பும் நபர்களுக்கு ஏற்றதாக 4 சீட்டர் வெர்ஷனே இருக்கின்றது.

மன்னர்களை போல அமர்ந்து பயணிக்க இந்த வெர்ஷனே ஏற்றதும்கூட. கேப்டைன் இருக்கைகளே இதற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, பின் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரு இருக்கைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். மசாஜ் அம்சம், சொகுசாக சாய்ந்து பயணிக்க ஏதுவான செட்-அப், குட்டி குளிர்சாதன பெட்டி மற்றும் பெரிய டிவி உள்ளிட்ட அம்சங்கள் லெக்சஸ் எல்எம்-இல் வழங்கப்பட்டு இருக்கும்.

Lexus lm interior

48 இன்ச் திரையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வீட்டில் இருக்கும் அனுபவத்தை அப்படியே மினி வேனில் வழங்க உதவும். லெக்சஸ் எல்எம்-இன் அதிகப்படியான நீளமே அதனை மினி வேன் என குறிப்பிடக் காரணமாக இருக்கின்றது. அதன் நீளம் மட்டும் 5,125 மிமீ ஆகும்.

இதேபோல், 1,890 மிமீ அகலத்தையும், 1,945 மிமீ உயரத்தையும் கொண்டதாக இந்த வாகனம் இருக்கின்றது. இதன் வீல் பேஸ் 3,000 மிமீட்டராக இருக்கின்றது. இந்த அளவுகளை வைத்து பார்க்கையில் தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் 2024 வெர்ஷன் எல்எம் சற்று பெரிய உருவம் கொண்டது என்பது தெளிவாக தெரிகின்றது.

Lexus lm 6 seater

2024 லெக்சஸ் எல்எம் மினி வேனின் 4 சீட்டர் வெர்ஷன் இரு அறைகளைக் கொண்டதாக இருக்கும். அதாவது, டிரைவர் அறை மற்றும் பயணிகள் அறை என இரு வெவ்வேறு அறைகளாக அது பிரிக்கப்பட்டு இருக்கும். இடையில் கண்ணாடியாளான சுவரே இருக்கும். அதேவேளையில், பயணிகளால் டிரைவருடன் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கும்.

ஆகையால், தனிமை என்பது மிக தாராளமாக பின்னிருக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இதுமட்டுமில்லைங்க, முற்றிலும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த இரு இருக்கைகளையும் மையப்படுத்தி இன்னும் பல அம்சங்களை லெக்சஸ் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், சூடான உணர்வை வழங்கும் ஆர்ம் ரெஸ்ட், பயணிகளின் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப அட்வான்ஸ்ட் ஹீட் மற்றும் குளிர்ச்சியை வழங்கும் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதுமட்டுமில்லைங்க பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மோதுவதற்கு முன்னரே எச்சரிக்கை வழங்கும் வசதி, மோதலை முன் கூட்டியே தவிர்க்கும் பிரேக் மற்றும் பிரேக் அசிஸ்ட் அம்சம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் அலர்ட் மற்றும் அப்னார்மல் டிரைவர் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

இ-லேட்ச் எனப்படும் தாழ்ப்பால் சிஸ்டமும் இந்த காரில் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அருகில் வரும் வாகனங்களின் வருகையை உணர்ந்து அதற்கேற்ப கதவை லாக் செய்து பயணிகளை பாதுகாக்கும். இத்தகைய அட்டகாசமான வாகனத்தையே லெக்சஸ் மோட்டார் ஷோ வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது. இதன் இந்திய வருகை விரைவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lexus lm seating position

ஆனால், எப்போது என்கிற துள்ளியமான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியர்கள் மத்தியில் மிக குறைவான அளவிலேயே மினி வேன்களுக்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், கடந்த சில மாதங்களாக இந்த வரவேற்பு சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை எப்போது வேண்டுமானாலும் அரங்கேறலாம். லெக்சஸ் நிறுவனம் இந்த சொகுசு மினி வேனை இரு விதமான மோட்டார் தேர்வுகளில் உலக சந்தையில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Lexus lm side design

4 சீட்டர் வெர்ஷனில் 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வையும், 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுடன் 2.5 லிட்டர் வழக்கமான பெட்ரோல் மோட்டார் உடன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இநத் இரண்டிலும் ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த மினி வேன் மைலேஜ் விஷயத்திலும் அசத்தும் என தெரிகின்றது. ஆனால், அதன் புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதே மினி வேன் போன்ற வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக திரை நட்சத்திரங்கள் மத்தியிலேயே இந்த ரக வாகனங்களுக்கு சூப்பரான டிாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. கியா கேரவன்ஸ், டொயோட்டா வெல்ஃபையர் போன்ற பெரிய உருவம் கொண்ட வாகனங்களே மினி வேன் பிரிவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இவை எம்பிவி ரக வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 17:39 [IST]
English summary
Lexus lm minivan unveiled at 2023 shanghai motor show
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X