கப்பல் போன்ற காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! இதோட விலை இவ்ளோதானானு வியக்கும் சொகுசு கார் காதலர்கள்!
சொகுசு கப்பலையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வசதிக் கொண்ட கார்கள் இந்தியாவில் பல விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான கார்களின் வரிசையில் விரைவில் ஓர் புதிய கார் இணைய இருக்கின்றது. பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லெக்சஸ்-இன் எல்எம் மாடலே அது ஆகும்.
இந்த காரை ஆடம்பர கப்பல்களுக்கே சவால் விடும் வசதிகளுடன் லெக்சஸ் உருவாக்கி இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. எல்எம் ஓர் எம்பிவி ரக சொகுசு காராகும். இதன் இரண்டாம் தலைமுறை வெர்ஷனுக்கே புக்கிங்குகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த காரை 4, 6 மற்றும் 7 ஆகிய இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க லெக்சஸ் முடிவு செய்திருக்கின்றது. சொகுசான பயணத்தை விரும்புவோர்களை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த காரை லெக்சஸ் அப்டேட் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே இவ்ளோ பெரிய காரில் நான்கு இருக்கைகள் தேர்வை வழங்கும் முடிவை அது எடுத்திருக்கின்றது.
இருப்பதிலேயே மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை இந்த தேர்வே வழங்கும். முன் பக்கத்தில் இருவர், பின் பக்கத்தில் இருவர் என மொத்தமாகவே நான்கு பேர் மட்டுமே பயணிக்க முடியும். பொதுவாக ஓர் எம்பிவி ரக காரில் 8பேர் வரைகூட பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய காரை அதிக லக்சூரி டிராவலை விரும்புவோர்களுக்கு அர்பணிக்கும் விதமாக 4 இருக்கைகள் ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்க லெக்சஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதந்துக் கொண்டிருப்பதைப் போன்ற அனுபவத்தை அது வழங்கும். இந்த அனுபவத்துடன் சேர்த்து புதிய டெக்னாலஜிக்களையும் இந்த காரில் அனுபவித்துக் கொள்ள முடியும்.
ஆமாங்க, லெக்சஸ் நிறுவனம் இந்த காரில் ஏகப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, முன் பக்கத்தில் மட்டும் இரண்டு பெரிய திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்று டிரைவருக்கான திரையாகவும், மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்டாகவும் செயல்படும். இதுதவிர, ஆடியோ மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 23 ஸ்பீக்கர்கள் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்திற்காக எல்எம்-இல் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, தலையணை போன்ற ஹெட்ரெஸ்ட், 48 அங்குல டிவி, 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், சூடாக்குதல் மற்றும் குளிர்வித்தல் ஆகிய இரு வசதிகளையும் கொண்ட இருக்கை என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் லெக்சஸ் சேர்த்திருக்கின்றது.
பின் பக்கத்தில் இருப்பவர்கள் சுலபமாக கிளைமேட் கன்ட்ரோல்களை பயன்படுத்தும் விதமாக ரூஃபில் அதற்கான கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த காரில் பயணிக்கும்போது அரண்மனையில் இருப்பதைப் போன்ற அனுபவமும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றது. குறிப்பாக, இதன் நான்கு இருக்கைகள் கொண்ட தேர்வில் பயணிக்கும்போது மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

உலக நாடுகளில் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.4 லிட்டர் டர்போ மைல்டு ஹைபிரிட் மற்றும் 2.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களை எல்எம்-இல் வழங்கப்படுகின்றது. இரண்டும் மிகுந்த சூப்பரான திறன்களை வெளியேற்றும் வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் ரூ. 1.20 கோடி தொடங்கி ரூ. 1.30 கோடி வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடில் இதைவிட சற்று அதிக விலையைக் கொண்டதாக அது இருக்கும். இந்த விலைக்கு இந்த கார் ஓகேவானதுதானா நீங்கள் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications









