அம்பானி, அதானிகளை இந்த கார் கட்டாயம் சுண்டி இழுக்கும்.. அட்டகாசமான அழகில் லெக்சஸ் ஜிஎக்ஸ் 550 வெளியீடு!

லெக்சஸ் நிறுவனத்தின் ஜிஎக்ஸ் 550 (Lexus GX 550) சொகுசு எஸ்யூவி கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் இந்திய வருகை, அதன் சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜின் விபரம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லெக்சஸ் நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550 காரை பொது பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது மூன்றாம் தலைமுறை ஜிஎக்ஸ் எஸ்யூவி ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் இரண்டாம் தலைமுறை ஜிஎக்ஸ் எஸ்யூவி காரை இந்த புதிய தலைமுறை ரீ-பிளேஸ் செய்ய இருக்கின்றது.

Lexus gx action shot

இந்த கார் மாடலின் இரண்டாம் தலைமுறை ஜிஎக்ஸ் 550 2010 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அப்டேட்டே இல்லாமல் ஜிஎக்ஸ் 550 விற்பனையில் இருந்து வந்துநிலையில் அதனை தற்போது லெக்சஸ் நிறுவனம் மாற்றி அமைக்க உள்ளது.

விரைவில் புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550 விற்பனைக்கு வர இருக்கின்றது. முதலில் வட அமெரிக்காவிலேயே அது விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு பின்னரே உலகின் பிற சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட இருக்கின்றது. புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550, டொயோட்டாவின் பிரபல எஸ்யூவி ரக காரான எல்சி300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

Lexus gx

அதாவது, இந்த காரை உருவாக்கப் பயன்படுத்தப்படும் டிஎன்ஜிஏ-எஃப் (TNGA-F) பிளாட்பாரத்தை பயன்படுத்தியே லெக்சஸ் தனது புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550-யை உருவாக்கி இருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே டொயோட்டாவின் எதிர்கால கார் மாடல்களான ஹைலக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

புதிய ஜிஎக்ஸ் 550 முந்தைய தலைமுறையைக் காட்டிலும் அதிக பாக்ஸியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பெட்டி போன்ற அமைப்பிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிகப் பெரிய மாற்றமாக வி8 எஞ்ஜினுக்கு பதிலாக ட்வின் டர்போ வி6 எஞ்ஜின் புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Lexus gx beauty

3.5 லட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்ஜின் அதிகபட்சமாக 344 பிஎச்பி பவரையும், 648 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் அனைத்து வீல்களும் இயங்கும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த மோட்டாரில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, இதே காரில் 2.4 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரும் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அட்டகாசமான மோட்டார் தேர்வுகளுடன் சேர்த்து மிக அதிக இட வசதியையும் வழங்கும் காராகவும் லெக்சஸ் புதிய ஜிஎக்ஸ் காரை உருவாக்கி இருக்கின்றது.

Lexus gx front beauty

4,950 மிமீ நீளம், 1,980 மிமீ ஆகலம், 1,865 மிமீ உயரம் மற்றும் 2,850 மிமீ நீளமான வீல்பேஸ் ஆகிய அளவுகளுடனேயே இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் வீல்கள் விஷயத்திலும் பன்முக ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. 18 அங்குலம், 20 அங்குலம் மற்றும் 22 அங்குலம் மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு அம்சங்களை லெக்சஸ் நிறுவனம் ஜிஎக்ஸ் 550-இல் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், வெளிப்புற தேற்ற கவர்ச்சிக்காக அழகிய லைட் செட்-அப் முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. காரின் உட்புறத்தில் லெதர் போர்த்தப்பட்ட டேஷ்போர்டு, இரண்டு பெரிய திரைகள் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Lexus gx seats

ஓர் திரை 12.3 அங்குலத்திலும், மற்றொன்று, 14 அங்குலம் கொண்டதாகவும் இருக்கின்றது. முதல் ஒன்று டிரைவருக்கான தகவலை வழங்கும் திரையாகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். இத்துடன், ஹெட்ஸ்-அப் திரையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஏழு மற்றும் ஆறு இருக்கைகள் தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அது விற்பனைக்கு வரும்போது ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதைத்தொடர்ந்து, மேலும் இரு அட்டகாசமான ஸ்பெஷல் வெர்ஷன்களை இதே காரில் வழங்க லெக்சஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. அந்த இரண்டும் முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்டதாக மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓவர்டிரெயில் (Overtrail) மற்றும் ஓவர்டிரெயில் பிளஸ் (Overtrail+) ஆகிய தேர்வுகளே விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆனால், இவற்றின் வருகை அரங்கேற இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் லெக்சஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஜிஎக்ஸ் 550 விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு மத்திக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான இதன் வருகை விபரம் வெளியாகவில்லை. சொகுசு கார் பிரியர்களைக் கவரும் பொருட்டு இந்த காரை இந்தியாவில் களமிறக்க லெக்சஸ் பிளான் போட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 9:05 [IST]
English summary
Lexus revealed third gen gx 550 suv with v6 engine
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X