2023 Lexus RX சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்! ஒட்டுமொத்த செலிபிரிட்டிகளையும் வளச்சு போட முடிவு பண்ணிட்டாங்க!

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான லெக்சஸ் (Lexus), இந்திய சந்தையில் அதன் 2023 லெக்சஸ் ஆர்எக்ஸ் (2023 Lexus RX) சொகுசு கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 95.80 லட்சம் விலையை அது நிர்ணயம் செய்திருக்கின்றது.

இரண்டு வெவ்வேறு விதமான வேரியண்டுகளில் இந்த சொகுசு வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். மேலே பார்த்த இந்த விலை ஆரம்ப நிலை வேரியண்டான ஆர்எக்ஸ் 350எச் லக்சூரி (RX 350h Luxury) எனும் வேரியண்டுடையதாகும். உயர் நிலை தேர்வு ஆர்எக்ஸ் 500எச் எஃப்-ஸ்போர்ட் பிளஸ் (RX500h F-Sport+) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Lexus rx front beauty

இதற்கு ரூ. 1.18 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும். அதாவது, வரிகள், இன்சூரன்ஸ் எதுவும் சேர்க்கப்படாத விலை விபரம் ஆகும். இவை சேர்க்கப்பட்டால் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 1 கோடியை தாண்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

லெக்சஸ் நிறுவனம் ஆர்எக்ஸ் சொகுசு காரை முதன் முதலில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. ஜனவரி மாதமே இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி நாட்டில் நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் இப்போதே லெக்சஸ் நிறுவனம் அதன் 2023 ஆர்எக்ஸ் சொகுசு கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

Lexus rx interior

லெக்சஸ் நிறுவனம் ஆர்எக்ஸ் 350எச்-க்கு குறைவான விலையையும், ஆர்எக்ஸ் 500எச்-க்கு மிக அதிக விலையையும் நிர்ணயம் செய்ய பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டிலும் வெவ்வேறு திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார்களே பயன்படுத்தப்பட்டு இருப்பதே அதிக விலைக்கான மிக முக்கியமான காரணம்.

ஆர்எக்ஸ் 500 எச் தேர்வை ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான வாகனமாக லெக்சஸ் வடிவமைத்திருக்கின்றது. இதற்கேற்ப 371 எச்பி மற்றும் 460 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதாக அத்தேர்வு இருக்கின்றது. இந்த சூப்பரான திறன் வெளிப்பாட்டிற்காக 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Lexus rx back side view

இந்த மோட்டாருடன் சேர்த்து ஹைபிரிட் சிஸ்டத்தையும் ஆர்எக்ஸ் 500 எச் எஃப்-ஸ்போர்ட் பிளஸ் தேர்வில் லெக்சஸ் வழங்கி உள்ளது. இந்த மோட்டாரும், பெட்ரோல் மோட்டாரும் இணைந்தே ஸ்போர்ட்ஸ் காரை போல 500எச்-ஐ இயங்கச் செய்கின்றன. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகும்.

அதேநேரத்தில் ஆர்எக்ஸ் 350எச் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கி.மீட்டராக., இருக்கின்றது. இந்த தேர்வில் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு உள்ளது. இவை இரண்டும் இணைந்து 250 எச்பி மற்றும் 242 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

Lexus rx side view

லெக்சஸ் நிறுவனம் ஆர்எக்ஸ் 350எச் தேர்வில் 259.2 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி பேக்கையும், ஆர்எக்ஸ் 500எச் வேரியண்டில் 288 வோல்ட் பேட்டரி பேக்கையும் அதன் ஹைபிரிட் சிஸ்டத்திற்காக வழங்கி இருக்கின்றது. இது நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் பேட்டரி பேக்காகும். இந்த பேட்டரி பேக் காரின் இயக்கத்தின்போதே சார்ஜாகிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

எஞ்ஜினை போலவே சொகுசு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலும் லெக்சஸ் ஆர்எக்ஸ் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. 14 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே, ஒயர்டு ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் லெக்சஸ் ஆர்எக்ஸ் சொகுசு கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய பன்முக வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஒரு கோடி ரூபாய்க்கு இணையான விலையை லெக்சஸ் நிர்ணயித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லெக்சஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு திரை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையிலும், போட்டி நிறுவனங்களுக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் விதமாக லெக்சஸ் தனது 2023 வெர்ஷன் ஆர்எக்ஸ் மாடலை இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 8:34 [IST]
English summary
Lexus rx launched variants prices powertrains and features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X