விக்ரம் பட இயக்குநருக்கு கமல் பரிசு வழங்கிய கார் நிறுவனம் இப்ப தரமான கார இறக்கிறுக்காங்க!
லெக்சஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது ஆர்எக்ஸ் காரை அப்டேட் செய்து ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்
இந்தியாவில் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 நடந்து கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியில் பல நிறுவனங்கள் வரிசையாக வந்து தங்கள் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொண்ட ஒரே சொகுசு கார் நிறுவனம் லெக்சஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் இன்று ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஆர்எக்ஸ் என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே இந்தியாவில் இந்த ஆர்எக்ஸ் காரை விற்பனை செய்து வந்தது. இந்த காரை தற்போது இந்நிறுவனம் முழுவதுமாக அப்டேட் செய்து இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லெக்சஸ் ஆர்எக்ஸ் கார் ஜிஏ-கே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில் தான் லெக்சஸ் இஎஸ் மற்றும் லெக்சஸ் என்எக்ஸ் எஸ்யூவி கார்களை தயாரித்து வருகிறது.

தற்போது புதிதாக வந்துள்ள ஆர்எக்ஸ் காரை பொருத்தவரை அதன் வெளிப்புறத்தோற்றம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. உட்புறமும் மார்டன் கேபின் மாற்றப்பறட்டுள்ளது. இது போக பல புதிய தொழிற்நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் எல்எஸ்3.0+ பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் லெக்சஸ் கார்களிலேயே பாதுகாப்பான காராக இது இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் இன்று முதல் துவங்குகிறது. ஆனால் இந்த காரின் விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2023ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ஆர்எக்ஸ் 5ம் தலைமுறை காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் முன்பக்கத்தில் லெக்சஸ் காரின் டிரேட்மார்க் கிரில் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்களை பொருத்தவரை ஸ்லீக்கர் ஹெட்லைட்கள், ஆங்குலர் டிஆர்எல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரூஃப் லைன்களை பொருத்தவரை கூபே-எஸ்க்யூ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சி பில்லர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வீல் ஆர்ச்கள் தற்போது உள்ள மாடலைவிடஅதிக வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர்கள் பின்பற்றப்பட்டுள்ளது. டெயில்லைட்டும் முழு நீள லைட் பாராக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கேபினை பொருத்தவரை 14 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இது சென்டர் கன்சோல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரைவருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் டிஜிட்டல் டிஸ்பிளேவில் வழங்கப்பட்டுள்ளது. கேபின் டிசைன் கிளீன் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உடன்புற இடமும் புதிய அப்டேட்டில் அதிகமாகியுள்ளது. இதன் வீல் பேஸ் பழைய காரை விட 60 மிமீ அதிகமாகியுள்ளது.
இன்ஜினை பொருத்தவரை புதிய அப்டேட்டில் ஹைபிரிட் ஆப்ஷன் இருக்கிறது. ஆர்எக்ஸ் 350 எச் காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து செயல்படுகிறது. ஆர்எக்ஸ் 450எச்+ பிளக் இன் ஹைபிரிட் காராக வருகிறது. டாப் என்ட் காராக ஆர்எக்ஸ் எச் காராக டர்போ பெட்ரோல் இன்ஜின் கார் இருக்கிறது. இது எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டு ஹைபிரிட் காராக விற்பனையாகிறது. இது கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








