யாரோ பிடிச்சிட்டு நிக்குறதுபோல நிக்கும்... சென்டர் - சைடு ரெண்டு ஸ்டாண்டுமே தேவைப்படாது!

சென்டர் மற்றும் சைடு ஸ்டாண்டு என ரெண்டுமே தேவைப்படாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லைகர் நிறுவனம் இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லைகர் மொபிலிட்டி அதன் ஸ்டாண்ட் போடாமலே நிற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே இந்த சம்பவத்தை லைகர் மொபிலிட்டி செய்துள்ளது. லைகர் எக்ஸ் மற்றும் லைகர் எக்ஸ் பிளஸ் என இரு வேரியண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் காட்சிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சைடு ஸ்டாண்டு மற்றும் சென்டர் ஸ்டாண்டு என எந்த ஸ்டாண்டும் இல்லாமல் இந்த வாகனம் தனித்து நிற்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

செல்ஃப் பேலன்ஸிங்

செல்ஃப் பேலன்ஸிங் டெக்னாலஜி

இதற்காக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆட்டோ பேலன்ஸிங் தொழில்நுட்பத்தை லைகபர் மொபிலிட்டி பயன்படுத்தி இருக்கின்றது. ரைடரின் பாதுகாப்பையும், கம்ஃபோர்ட்டான ரைடிங் அனுபவத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த அம்சத்தை தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லைகர் மொபிலிட்டி அறிமுகம் செய்திருக்கின்றது. மிக குறைவான வேகத்தில் பயணிக்கும்போதும் இந்த வாகனம் சாயாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவைப்படாட்டி ஆஃப் பண்ணிக்கலாம்

ஆமாங்க, நிற்கும்போது மட்டுமில்லைங்க மிகவும் குறைவான வேகத்தில் செல்லும்போதும் இந்த ஸ்கூட்டரின் செல்ஃப் பேலன்ஸிங் சிஸ்டம் திறம்பட செயல்படும். இந்த அம்சத்தை தேவைக்கேற்ப ஆக்டிவேட் மற்றும் டீ-ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. லைகர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த செல்ஃப் பேலன்ஸ் அம்சம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது.

செல்ஃப் பேலன்ஸிங்

லைகர் எக்ஸ் மற்றும் லைகர் எக்ஸ் பிளஸ் ஆகிய இரண்டிலும் ரிவர்ஸ் ரைடு மற்றும் பயிற்சி பெறுபவருக்கான மோட் உள்ளிட்டவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஓவர்-தி-ஏர் அப்டேட் வசதியையும் இந்த இருசக்கர வாகனத்தில் லைகர் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. லைகர் நிறுவனம் இந்த ஆட்டோ பேலன்ஸிங் அம்சத்தை தனது சொந்த முயற்சியிலேயே உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் ஆகிய இரண்டும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பன்முக வண்ண தேர்வு

இந்த இருசக்கர வாகனத்தை பன்முக நிற தேர்வில் உருவாக்கி இருக்கின்றது. கிரே, போலார் ஒயிட், ப்ளூ, டட்டானியம் மற்றும் ரெட் ஆகிய ஐந்து விதமான நிற தேர்வுகளிலேயே இந்த வாகனத்தை லைகர் உருவாக்கி இருக்கின்றது. லைகர் எக்ஸ் மற்றும் லைகர் எக்ஸ் பிளஸ் ஆகிய இரண்டிலும் ஒரே திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தை வெளிப்படுத்தக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

செல்ஃப் பேலன்ஸிங்

ரேஞ்ஜ் விபரம்

ஆனால், இரண்டும் வித்தியாசமான ரேஞ்ஜை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. லைகர் எக்ஸ் வேரியண்டின் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் 60 கிமீட்டராகவும், லைகர் எக்ஸ் பிளஸ் ஓர் ஃபுல் சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலிலும் லிக்யூடு கூல்டு லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. லைகர் எக்ஸில் இந்த பேட்டரி கழட்டி மாட்டும் வசதியுடனும், 3 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜாகும் திறனிலும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

ஆனால், லைகர் எக்ஸ் பிளஸ் வேரியண்டில் உள்ள பேட்டரிகளை கழட்ட முடியாது. இதேபோல் இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் அதிக வேகத்தில் சார்ஜ் ஆகும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 4ஜி மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், எல்இடி லைட்டுகள் மற்றும் டிஎஃப்டி திரைகள் போன்ற அம்சங்களும் லைகரின் செல்ஃப் பேலன்ஸிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த டிஎஃப்டி திரையில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கக் கூடிய திரையே வழங்கப்பட்டுள்ளது. லைகர் நிறுவனம் வெகு விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்க இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் மத்தியில் புக்கிங் பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, புக்கிங் பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 16:22 [IST]
English summary
Liger self balancing electric scooters unveiled auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+