இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு ஒட்டுமொத்த சந்தையும் அலறிடும்.. இந்தியாவில் வலம் வந்த விநோத கார்!
மஹாராஷ்டிராவில் விநோத வாகனம் ஒன்று சுற்றி திரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காரின் படங்கள் தற்போது இணையத்திலும் வெளியாகி இருக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமும் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கின்றது. அப்படி என்ன கார் அது? அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது அசூர வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளே முக்கிய காரணம் என கூறலாம். மத்திய அரசு அதன் சார்பில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மானிய திட்டத்தையும், சில சிறப்பு சலுகைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், சில மாநில அரசுகள் வரி தள்ளுபடி, பதிவு கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக இ-வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவுதன் காரணத்தினால் நிறுவனங்கள் சில தங்களின் மின்சார வாகனங்களை நாட்டில் களமிறக்க அதிகம் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்தியர்களுக்கு பரீட்சையமான நிறுவனங்கள் தொடங்கி புதுமுக நிறுவனங்கள் வரை என பன்முக வாகன உற்பத்தியாளர்கள் இத்தகைய முயற்சியையே மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே விநோத வாகனம் ஒன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தால் வழங்கப்படும் தற்காலிக பதிவெண்ணுடன் சுற்றி திரிந்திருக்கின்றது.

இந்த வாகனம் ஓர் மின்சார வாகனம் ஆகும். இது பிரபல கார் உற்பத்தி நிறுவனமான லிஜியர் உடையது என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். தற்போது இந்திய சாலையில் தரிசனம் வழங்கி இருக்கும் கார் மாடலின் பெயர் 'லிஜியர் மைகி' ஆகும். இதையே சோதனை ஓட்டம் செய்திருக்கின்றனர்.
அப்போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. இந்த படத்தை மோட்டார் பீம் அதன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பட்சத்தில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த எம்ஜி கோமெட் இவிக்கு போட்டியாக அதன் வருகை அமையும்.

ஆமாங்க, கோமெட் இவியை போலவே மிகவும் குட்டியான மின்சார காரே லிஜியர் மைகி ஆகும். இதை விற்பனைக்குக் கொண்ட வரும் நோக்கிலேயே இந்திய சாலையில் லிஜியர் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்கள் மத்தியில் மலிவு விலை வாகனங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
இதை முன் வைத்தே தன்னுடைய மலிவு விலை கார் மாடலான மைகியை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் லிஜியர் களமிறங்கி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இருக்கின்றது. இது ரூ. 7.98 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதைவிட குறைவான விலையிலேயே லிஜியர் மைகி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஐரோப்பிய சந்தையில் 13,995 யூரோக்களுக்கு இந்த கார் விற்கப்படுகின்றது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 12.57 லட்சம் ஆகும். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இதைவிட குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு விதமான ட்ரிம்களில் இந்த கார் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. குட் (G.OOD), ஐ.டீல் (I.DEAL, இ.பிக் (E.PIC) மற்றும் ஆர்.இபெல் (R.EBEL) ஆகியவையே அவை ஆகும். இதில் ஆரம்ப நிலை தேர்வாக குட் இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 63 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.
நம்ம ஊரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தருவதைவிட குறைவான ரேஞ்ஜ் திறன் இதுவாகும். முழுக்க முழுக்க நகர பயன்பாட்டை மையப்படுத்தி இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனாலேயே இந்த அளவிற்கு குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய இ-காராக மைகி காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வு ஓர் முழு சார்ஜில் 123 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, 15 அங்குல அலாய் வீல்கள், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமிரா மற்றும் பல அம்சங்களை இந்த காரில் லிஜியர் நிறுவனம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த சிறப்பு வசதிகளையே லிஜியர் மைகி கொண்டிருக்கின்றது. இத்தகைய காரே தற்போது இந்திய சந்தையில் அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு வருவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், விரைவில் இது பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









