இந்த காரை எல்லாம் இப்ப வாங்குனா இதையெல்லாம் மிஸ் பண்ணிடுவீங்க! என்ன நடக்கப்போகுதுன்னு பாருங்க!
இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் சில கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைத் தொடர்ந்து தக்க வைக்க அந்த தயாரிப்பு நிறுவனங்கள் அந்த கார்களை அப்டேட் செய்யவுள்ளனர். இப்படியாக அப்டேட்டிற்கு காத்திருக்கும் 6 கார்களின் பட்டியலைக் காணலாம்
இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகச் செயல்பட்டு வருகிறது. ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டு வருகின்றனர். இதில் குறிப்பிட்ட கார்கள் தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று விற்பனையாகி வருகிறது. மக்களிடம் கிடைக்கும் இந்த வரவேற்பைத் தக்க வைக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் அவ்வப்போது அப்டேட்டை செய்துவெளியிடுவார்கள்.

அப்படியாக இந்த செய்தியில் நாம் இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பும் 6 கார்கள் அடுத்த ஒரு சில மாதங்களில் அப்டேட் செய்யத் தயாராக இருக்கிறது. தற்போது இந்த காரை யாரும் வாங்கும் எண்ணத்திலிருந்தால் இந்த அப்டேட் வெளியாவதற்கு முன்பு வாங்கினால் குறிப்பிட்ட அப்டேட் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அப்டேட் வெளியாகும் வரை காத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என்ன விதமான அப்டேட்டை குறிப்பிட்ட காரில் எதிர்பார்க்கலாம் என்ற தகவலையும் காணலாம் வாருங்கள்.
5-டோர் மஹிந்திரா தார்

மஹிந்திரா நிறுவனம் தற்போது 3 டோர் தார் காரை தான் வெளியிட்டு வருகிறது. மாருதி ஜிம்னி காருக்கு பிறகு தனது தார் காரில் 5 டோர் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த கார் பழைய காரிலிருந்து நீளமான வீலபேஸை கொண்டது. மேலும் இதில் மல்டிபிள் சீட் லேஅவுட், ரியர் வீல் டிரைவ் கான்ஃபிகரேஷன் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தாண்டு இறுதியில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2024ம் ஆண்டு ஷோரூம்களுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார் ஹூண்டாய் கிரெட்டா. இந்த கார் அடுத்த ஆண்டு அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் புதிய அப்டேட்டில் அதன் டிசைன் தன்மையிலேயே மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்களையும் காருக்குள்ளே குறைவான மாற்றங்கள் குறிப்பாக அடாஸ் தொழிற்நுட்பத்துடன் புதிய அப்டேட்டட் ஹூண்டாய் கிரெட்டா கார் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்

ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஒரு கார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் 5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இதன்அப்டேட்டட் வெர்ஷனர் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் செய்யப்பட்டுள்ள சில காஸ்மெடிக் மாற்றங்கள், மற்றும் ஸ்டிராங் ஹைபிரிட் ஆப்ஷ் ஆகியவை இந்த காரின் விலையைச் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதமே இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்

டாடா நெக்ஸான் கார் இந்தியாவிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் எஸ்யூவி காராகும். இந்த காரில் அடுத்த ஆண்டு மிகப்பெரிய மாற்றங்களுடன் வெளியாகவுள்ளது. டாடா நிறுவனம் இதற்காகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த காரின் டிசைன பொருத்தவரை இந்நிறுவனம் கடந்த மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த கர்வ் காரின் டிசைனின் இன்ஸ்பிரேஷனில் இந்த கார் மாற்றி வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது. கறிப்பாக இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கூபே வடிவ ரூஃப்லைனை கொண்டு வர முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. காரின் உள்ளேயும் பெரிய டச் ஸ்கிரீன் உள்ளிட்ட மாற்றங்கள் வரவுள்ளன.
புதிய தலைமுறை மாருதி டிசையர்

மாருதி நிறுவனத்தின் ஒரு முகமாகவே மாருதி டிசையர் கார் இருக்கிறது. இந்த காரின் 3ம் தலைமுறை கார் 2024ம் ஆண்டு மார்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் வெளிப்புறத்தோன்றம் 3ம் தலைமுறையில் பெரிய அளவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மாருதி நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட கார் வெளிநாட்டில் ஆங்காங்கே டெஸ்டிங்கில் இருப்பதைக் காண முடியது. இந்த காரிலும் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் மிக முக்கிய மாற்றமாக இன்ஜினில் ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆப்ஷன் வழங்கப்படும் எனவும் இது ஒரு லிட்டருக்கு 35-40 கி.மீ வரை மைலேஜை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









