Luxury Car-களை சமீபத்தில் வாங்கிய திரை நட்சத்திரங்கள்.. இந்த விலை காருடையதா?, இல்ல கப்பலுடையதா?..
கார்களுக்காக கோடி ரூபாய்களை அசால்டாக வாரி இறைப்பதில் பெரும் தொழிலதிபர்களுக்கே டஃப் கொடுப்பவர்களாக சினிமா நடிகர்கள் இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பல கோடிகளை அசால்டாக செலவு செய்து சொகுசு கார்களை வாங்கிய முன்னணி திரைநட்சத்திரங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போனவர்களாக நடிகர்கள் இருக்கின்றனர். அதிலும், பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்தால் மன்னர்களுக்கே பொறாமை வந்துவிடும். அந்த அளவிற்கு மிகுந்த லக்சூரி வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடமாக இருக்கட்டும் அல்லது பயணிக்கும் கார்களாக இருக்கட்டும் அனைத்தும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றன.

இவர்கள் ஒன்றிரண்டு ஆயிரங்களையோ அல்லது லட்சங்களையோ இதற்காக செலவிடுவது இல்லை. கோடி கணக்கான ரூபாய்களையே இதற்காக அவர்கள் வாரி இறைக்கின்றனர். குறிப்பாக, கார்களை வாங்கும்போது பாலிவுட் திரையுலகினர் காசை பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை. இதற்கு உதாரணமாகவே சில நிகழ்வுகள் சமீபத்தில் பாலிவுட்டில் அரங்கேறின.
நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் பல கோடி ரூபாய்களைக் கொட்டி தங்களுக்கான சொகுசு கார்களை வாங்கி இருக்கின்றனர். இவர்களைபோல் இன்னும் பலர், கோடிகளைக் கொட்டி கார்களை வாங்கி இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்கும் வகையில் மிக மிக விலை உயர்ந்த கார்களை நடிகர்கள் மற்றும் அவர்கள் வாங்கிய கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நேஹா ஷர்மாவின் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார்: பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளில் நேஹா ஷர்மாவும் ஒருவர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிய சோலோ படத்தில், கதாநாயகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர். இவரே சமீபத்தில் தன்னுடைய பயணங்களுக்காக ரூ. 1 கோடி மதிப்புள்ள 'மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ' (Mercedes Benz GLE) சொகுசு காரை வாங்கினார்.
இந்தியாவில் இந்த சொகுசு கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 300டி, 450 மற்றும் 400டி ஆகியவையே அவை ஆகும். மூன்றிலும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ரூ. 88 லட்சம் தொடங்கி ரூ. 1.05 கோடிக்கும் அதிகமான விலையில் பென்ஸ் ஜிஎல்இ விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

சில்பா ஷெட்டி மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600: சமீபத்தில் காரை வாங்கிய முன்னணி பாலிவுட் திரை நட்சத்திரமாக சில்பா ஷெட்டி இருக்கின்றார். இவர் இந்தியாவின் மிக விலை உயரிய கார் மாடலான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரையே வாங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய விலை ரூ. 2.92 கோடிக்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சல்மான் கான் புல்லட் ப்ரூஃப் நிஸான் பேட்ரோல்: பாலிவுட் திரையுலகின் முன்னணி திரை நட்சத்திரங்களில் சல்மான்கானும் ஒருவர் ஆவார். சமீபத்திலேயே இவர் இந்த நிஸான் பேட்ரோல் காரை வாங்கினார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி இதன் புல்லட் ப்ரூஃப் வெர்ஷனையே அவர் வாங்கி இருக்கின்றார்.
இந்த காரின் உண்மையான விலை இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதன் விலை ரூ. 2 கோடிக்கும் அதிகமாகதான் இருக்கும் என கூறப்படுகின்றது. புல்லட் ப்ரூஃப் நிஸான் பேட்ரோலுக்கு சர்வதேச சந்தைகளில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. புல்லட் மட்டுமின்றி கையெறி வெடிகுண்டு வீச்சுகளில் இருந்தும் இந்த கார் அதன் பயணிகளை பாதுகாக்கும் என கூறப்படுகின்றது.
இந்த காரில் 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகப்பட்சமாக 405 எச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த எஞ்ஜினுடன் வழங்கப்படுகின்றது. இது ஓர் 4-சக்கர-டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

ஷாருக் கான் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ்: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்த சொகுசு கார் கொள்முதல் என இதனை கூறலாம். இந்த காரின் விலை ரூ. 8.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதுவே பலரின் கவனத்தை ஈர்க்க காரணமாக இருக்கின்றது.
இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரை வெகு சமீபத்திலேயே ஷாருக்கான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக ஆடம்பர வசதிகளுக்கு பெயர்போன காராக ரோல்ஸ் ராய்ஸ் காராக கல்லினன் பிளாக் பேட்ஜ் இருக்கின்றது. இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டாரால் அதிகபட்சமாக 600 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக மிக அதிக ஆடம்பர வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரை ஒரு சிலர்களே இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்ரிதா அரோரா மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி: மலாய்கா அரோராவின் சகோதரியும், பிரபல திரை நட்சத்திரமானவர் அம்ரிதா அரோரா. இவரிடத்தில் ஏற்கனவே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் போன்ற மிக மிக விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும் சமீபத்தில் அழர் பென்ஸ் ஜே-வேகன் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இதன் விலை ரூ. 3.3 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த நடிகர்கள் மட்டும் இல்லைங்க இன்னும் பல நடிகர்கள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இருக்கின்றனர். அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பலர் இந்த வரிசையில் இணையவும் இருக்கின்றனர். ஏன் இந்த பட்டியலில் பார்த்த நடிகர்கள்கூட அடுத்த சில நாட்களில் வேறு சில கார்களை வாங்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
