Fronx and Comet Launch: கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க! அடுத்த மாசமே இந்த காரெல்லாம் வருசை கட்டி வரப்போகுது

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்யூவி கார்களுக்கான டிரெண்ட் ஆரம்பித்தது. பின்பு அது தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகிறது. இன்று மக்கள் எலெக்ட்ரிக் கார்களையும் விரும்புகின்றனர், எஸ்யூவி கார்களையும் விரும்புகின்றனர். இந்த பதிவில் நாம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியலைக் காணப்போகிறோம்.

மாருதி ஃப்ராங்க்ஸ்: மாருதி நிறுவனம் தனது பலேனோ காரை தழுவி உருவாக்கப்பட்ட ஃப்ராங்க்ஸ் காரை கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் முதன் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட், உள்ளிட்ட பல கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார் தற்போதே 13 ஆயிரம் புக்கிங்களை பெற்றுள்ளது.

கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க! அடுத்த மாசமே இந்த காரெல்லாம் வருசை கட்டி வரப்போகுது!

இந்த மாருதி ஃப்ராங்க்ஸ் காரில் 1.0 லிட்டர் கே -சிரீஸ் டர்போ பூஸ்டர் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது புராகிரஷிவ் ஸ்மார்ட் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் கே சீரீஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இந்த இன்ஜின் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் டெக்னாலஜியை கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸில் இயங்கும் திறன் கொண்டது.

எம்ஜி கோமெட் இவி: எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கோமெட் என்ற குறைந்த விலை இவி காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் இதை இரண்டாம் காலாண்டில் வெளியிட முடிவு செய்து ஒத்தி வைத்தது. இந்த காரை இந்நிறுவனம் வரும் ஏப்ரல் மாத மத்தியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் எம்ஜி ஏர் என வெளிநாட்டில் விற்பனையாகிவரும் காரின் இந்திய வெர்ஷன் தான் இது இந்த காரில் 20 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டாராக 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 250-300 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் இ பெர்ஃபாமென்ஸ்: அதிகமான வேகம் மற்றும் சிறப்பான ஃபெர்பாமென்ஸை விரும்புபவர்களுக்கு மெர்சிடீஸ் கொண்டு வரும் கார் தான் எஎம்ஜிஜிடி 63 எஸ் இ பெர்ஃபாமென்ஸ், இந்த கார் 4.0 ,லிட்டர் வி8 பைடர்போ இன்ஜின் மற்றும் எலெக்ட்ிரக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எம்ஜி கார்களிலேயே இந்த கார் தான் பவர்ஃபுல்காராக வரவுள்ளது.

இந்த கார் வி8 இன்ஜின் உடன் 843 எச்பி பவரை மற்றும் 1400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் காராக இருக்கிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்க வெறும் 2.9 நொடிகள் ஆகிறது. இந்த காரை எலெக்ட்ரிக் மோடிலும் பயன்படுத்த முடியும். அப்படிப் பயன்படுத்தினால் தொடர்ந்து 12 கி.மீ வரை ஓட்டிச்செல்ல முடியும்.

லம்போர்கினி உரூஸ் எஸ் : லம்போர்கினி காரின் என்ட்ரி லெவல் எஸ்யூவிக கார் இந்த உரூஸ் எஸ் கார் இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் இருக்கிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் உரூஸ் காருக்க பதிலாக விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது. சமீபத்தில் அறிமுகமான உரூஸ் பெர்ஃபாமனெட் காருக்கு கீழே இந்த கார் பிளேஸ் செய்யப்படுகிறது.

இந்த காரில் 4.0 லிட்டர் வி8 இன்ஜின் இருக்கிறது. இது 666 எச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த பைக் 305 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டது. இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 வீல் டிரைவ் காராகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 25, 2023, 12:40 [IST]
English summary
List of car launches in april 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+