குழந்தைகள் தின ஸ்பெஷல்: சிறுவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் கார்களின் லிஸ்ட்! மைலேஜவிட இது ரொம்ப முக்கியம்

பாதுகாப்பான பயணம் என்பது அனைவருக்கும் கட்டாயமானது. இதனால்தான் வாகன போக்குவரத்து விஷயத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தி வருகின்றது. மேலும், வாகன உற்பத்திக்கான வழிக்காட்டுதல்களையும் அவ்வப்போது வகித்து அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சில பாதுகாப்பு அம்சங்களைக் கார்களில் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருக்கின்றது.

அவற்றில் சிலதே ஏபிஎஸ், ஆறு ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் இருக்க வேண்டும் என்பது ஆகும். இதேபோல், விரைவில் அடாஸ் மற்றும் இன்பில்ட் கொலிசன் வார்னிங் சிஸ்டத்தையும் அரசு அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Cars that offer maximum safety for children

வாகன விபத்துகளையும், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் முயற்சியாக இதுபோன்ற அம்சங்களை அரசு கட்டாயமாக்கி வருகின்றது. அரசு மட்டுமல்ல வாகன உற்பத்தி நிறுவனங்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அதிக தரம் மிக்க கார்களை சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக, ஒரு சில வாகன உற்பத்தியாளர்கள் சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் அதிகம் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். ஆகையால், இப்போது சிறியவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் கார்களும் சந்தையில் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கி இருக்கின்றன. அவற்றில் டாப் 5 கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tata safari

டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் (Tata Safari and Tata Harrier): இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மடலாக இந்த இரண்டு கார் மாடல்களும் இருக்கின்றன. மேலும், டாடாவின் மற்ற தயாரிப்புகளைப் போலவே இதுவும் மிக மிக அழகிய மற்றும் கவர்ச்சியான கார் மாடல்களாக இருக்கின்றது.

மேலும், அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட காராகவும் இவை காட்சியளிக்கின்றன. இந்த கார் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவருக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டது. இதனாலேயே இந்த கார் 5 நட்சத்திரங்களை இந்த விஷயத்தில் பெற்றிருக்கின்றது. மிக முக்கியமாக சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் 49 புள்ளிகளுக்கு 45 எனும் உச்சபட்ச புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கின்றது.

Tata harrier

இதை வைத்தே இந்த கார் சிறுவர்களுக்கான அதிக பாதுகாப்பை வழங்கும் கார் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. குழுந்தைகளுக்கான பாதுகாப்பு தன்மைகுறித்து ஆராயும் விதமாக இந்த காரில் 18 மாத குழந்தைக்கான டம்மியும், 3 வயது குழந்தைக்கான டம்மியும் வைத்து மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

அப்போதே, இந்த டாப்பான புள்ளிகளை அது பெற்று அசத்தியது. இந்திய சந்தையில், இந்த கார்கள், அதாவது டாடா சஃபாரி ரூ. 16.19 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், ஹாரியர் ரூ. 15.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் காணப்படுகின்றது.

Skoda slavia matte edition

அந்தவகையில், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் மவுண்டுகள், ஏழு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், ஸ்பீட் சென்சிங் டூர் லாக், சைல்டு லாக், மும்முனை சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் கிராஸ் அலர்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், டோர் ஓபன் அலர்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் என ஏகப்பட்ட வசதிகளை இந்த கார்களும் தன்னுள் அடக்கி இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா (Volkswagen Virtus and Skoda Slavia): டாடாவின் சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்களை அதிக பாதுகாப்பை குழந்தைகளுக்கு வழங்கும் கார் மாடலாக ஃபோக்ஸ்வேகனின் விர்சஸும், ஸ்கோடாவின் ஸ்லேவியாவும் உள்ளன. இந்த இரண்டும் வெவ்வேறு பிராண்டுகளுடையதாக இருந்தாலும், இரண்டும் ஒரே பிளாட்பாரத்தில் வைத்து தயாரிக்கப்படும் கார் மாடல்களாகும்.

Volkswagen taigun trail edition

இதனால்தான் இந்த கார்களால் பாதுகாப்பு விஷயத்திலும் அதிக புள்ளிகளைப் பெற முடிந்திருக்கின்றது. இந்த கார்கள் சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஆய்வில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. மேலும், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங்கில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரிலும் ஏகப்பட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஐசோஃபிக்ஸ் மவுண்டுகள், சைல்டு லாக் ஆகியவைக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஃபோக்ஸ்வகன் விர்சுஸ் ரூ. 11.48 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், ஸ்கோடா ஸ்லேவியா ரூ. 10.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் (Volkswagen Taigun and Skoda Kushaq): ஆமாங்க, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடாவின் மற்றுமொரு அதிக பாதுகாப்பை வழங்கும் கார் மாடலாக டைகுன் மற்றும் குஷாக் ஆகியவை இருக்கின்றன. இவையும் விர்சுஸ் மற்றும் ஸ்லேவியாவை போலவே கூட்டணியின் கீழ் தயாரிக்கப்பட்ட கார் மாடல்கள் ஆகும். ஆகையால், இரண்டும் பாதுகாப்பு தரத்தில் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன.

ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷத்தில் இந்த கார்கள் பெற்றிருக்கின்றன. 6ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் மவுண்டுகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், இஎஸ்சி, சைல்டு லாக், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், மிடில் ரியர் த்ரீ பாயிண்ட் சீட்பெல்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த கார்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களினாலேயே இந்த கார் சிறியவர்களுக்கான பாதுகாப்பு விசயத்தில் 49புள்ளிகளுக்கு 42புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): இந்தியாவில் சிறியவர்களுக்கான அதிக பாதுகாப்பை செடான் ரக கார்களில் முன்னணி இடத்தில் இந்த கார் மாடலே இருக்கின்றது. இது சிறுவர்களுக்கான பாதுகாப்பு வழங்கும் விசயத்தில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. மேலும், ஒட்டுமொத்த பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 13.43 லட்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மேலும், இந்த ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே அனைவருக்கும் அதிக பாதுகாப்பை அந்த கார்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. மைலேஜ் மற்றும் மலிவு விலையை பார்த்து பாதுகாப்பு விஷயத்தில் யாரும் தவறு செய்யக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இந்த பதிவு வழங்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 20:02 [IST]
English summary
List of cars that offer maximum safety for children
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X