பைக்கிற்கு செலவு செய்யும் தொகையிலேயே இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்கிடலாம்... இதை ஓட்ட லெசன்ஸ்கூட தேவையில்ல!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. பலர் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற தயாராக இருக்கின்றனர். ஆனால், அதன் உயரிய விலை அவர்களுக்கு மிக பெரிய தடை கல்லாக இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி ரூ. 8.49 லட்சம் வைத்தால் மட்டுமே எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும் என்கிற சூழல் இந்தியாவில் நிலவுகின்றது. இதேபோல், ஓர் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வாரி இறைத்தால் மட்டுமே அதிக ரேஞ்ஜ் எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்க முடியும் என்கிற நிலை தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு சில நிறுவனங்கள் அனைவருக்கும் எலெக்ட்ரிக் கார் என்கிற யுக்தியின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கார்

அதாவது, மிகவும் மலிவு விலையில் மாடிஃபை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை லோக்கல் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டிருக்கின்றன. ஓர் பைக்கை வாங்கக் கூடிய விலையில் சில நிறுவனங்கள் விண்டேஜ் ரக எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, இந்தியாவில் மாடிஃபிகேஷன் நிறுவனங்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ப்ளூடோ மோட்டார்ஸின் விண்டேஜ் ரக எலெக்ட்ரிக் கார்

பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ப்ளூடோ மோட்டார்ஸ். இந்த நிறுவனம் அண்மையில் வெள்ளை நிற விண்டேஜ் ரக காரை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றிய விற்பனைக்கு வழங்கியிருந்தது. இதன் விலை ரூ. 3 லட்சத்திற்கும் குறைவு என கூறப்படுகின்றது. இருவர் மட்டுமே இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீ ஆகும். அதேவேளையில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 19 அங்குல ட்யூப் ரக டயர்கள் மற்றும் எல்இடி ஆக்ஸிலியரி லேம்ப் ஆகியவற்றை இந்த காரில் ப்ளூடோ மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

கிரீன் மாஸ்டர் எலெக்ட்ரிக் கார்

கிரீன் மாஸ்டர் இதுவும் ஓர் இரண்டு இருக்கைகள் மட்டுமே எலெக்ட்ரிக் காராகும். டூயல் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கன்சோலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. ஸ்போக் வீல்கள் மற்றும் ட்யூப் ரக டயர்கள் ஆகியவையே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது ராயல் என்பீல்டு பைக்குகளில் பயன்படுத்தப்படும் வீல்கள் ஆகும். இந்த வீலை மட்டுமில்லைங்க, காரின் பல்வேறு பாகங்கள் வேறு வாகனங்களின் பாகங்களுடையதாகும்.

அங்கும், இங்குமாக வெவ்வேறு வாகனங்களின் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டே கிரீன் மாஸ்டர் எலெக்ட்ரிக் கார். இதன் விலை ரூ. 4.5 லட்சம் ஆகும். மூன்று வாரண்டி உடன் இவ்வாகன் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீ வேகம் ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மிகவும் அழகிய விண்டேஜ் ரக காராக இதனை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

கிளாசிக் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் ரக எலெக்ட்ரிக் கார்

பல தசாப்தங்களாக வாகன உற்பத்தியை மேற்கொண்டு வரும் நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் இருக்கின்றது. இந்த நிறுவனம் ஒரு காலத்தில் இரண்டு கதவுகள் கொண்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்கியது. இதை பிரதிபலிக்கும் வகையிலேயே ஓர் எலெக்ட்ரிக் கார் மாடிஃபிகேஷன் நிறுவனங்களின் வாயிலாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லைட், முட்டை வடிவ குரோம் க்ரில், ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜ் என அச்சு அசல் ரோல்ஸ் ராய்ஸ் காரை போல் அது உருவாக்கப்பட்டு இருக்கும்.

இதுவும் இரண்டு இருக்கைகள் கொண்ட் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மாருதி சுஸுகியின் ஜென் காரில் இடம் பெற்றிருக்கும் சில அம்சங்களை இந்த காரில் நம்மால் காண முடியும். ஸ்டியரிங் வீல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை வேறு வாகனங்களில் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ராயல் சஃபாரி

மிக மிக அழகிய வாகனம் என இதனை கூறலாம். வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் போல் இது காட்சியளிக்கின்றது. இதில் இருவர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், பெரிய அளவில் இட வசதி கிடைக்காது. அதேநேரத்தில் ஒரு முறை ஃபுல்லாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக. லித்தியம் அயன் மற்றும் லீட் ஆசிட் ரக பேட்டரி பேக்குகள் இந்த காரில் பயன்படுத்தப்படுகின்றது.

எலெக்ட்ரிக் வில்லிஸ்

ஆஃப் ரோடு வாகன பயன்பாட்டாளர்களுக்கு இப்போதும் மிகவும் பிடித்தமான வாகனமாக வில்லிஸ் இருக்கின்றது. இந்த வாகனத்தின் மின்சார வெர்ஷனையே வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம் ரூ. 2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதை ஃபுல்லாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஒரிஜினல் வில்லிஸைவிட மிக சிறிய தோற்றம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, February 13, 2023, 17:40 [IST]
English summary
List of custom made vintage themed electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+