2024 தேர்தலுக்கு தயாராகும் அரசியல்வாதிகள்... ஒரே மாசத்துல இவ்வளவு ஃபார்ச்சூனர் காரை வாங்கி குவிச்சிட்டாங்க...
இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை கடந்த ஜனவரி மாதம் 356 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த காரின்விற்பனை அதிகரிக்க என்ன காரணம்? விரிவாகக் காணலாம் வாருங்கள்
இந்தியாவில் முழு சைஸ் எஸ்யூவிகளுக்கு என்று ஒரு மவுசு இருக்கிறது. இந்திய மக்கள் பலர் இந்த ரக எஸ்யூவியை வாங்கக் கனவுடன் இருக்கின்றனர்.இது சமூகத்தில் ஒரு அந்தஸ்தை உருவாக்குகிறது. இதற்காகவே பெரிய பெரிய அரசியல்வாதிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை இந்த ரக வாகனங்களைத் தான் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அதிகமாக விற்பனையா முழு சைஸ் எஸ்யூவிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காலண்டர் ஆண்டின் முதல் மாதம் யாரும் எதிர்பாராத அளவு விற்பனையை டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பெற்றுள்ளது. இதுவரை ஃபார்ச்சூனர் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இப்படி ஒரு விற்பனையைப் பெற்றதில்லை கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 3698 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 811 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 356 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்டர் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் மொத்தம் 244 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் வெறும் 143 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 71 சதவீத வளர்ச்சியாகும்.
| Rank | Model | Jan'23 | Jan'22 | Growth (%) YoY |
| 1 | Toyota Fortuner | 3,698 | 811 | 356 |
| 2 | MG Gloster | 244 | 143 | 71 |
| 3 | Jeep Meridian | 200 | - | - |
| 4 | Skoda Kodiaq | 196 | 113 | 73 |
| 5 | Volkswagen Tiguan | 72 | 61 | 18 |
| 6 | Citroen C5 Aircross | 16 | 40 | -60 |
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் எம்ஜி நிறுவனம் தனது க்ளோஸ்டர் காரை அப்டேட் செய்திருந்தது. இதில் லெவல் 1 அடாஸ் தொழிற்நுட்பம் பெபாருத்தப்பட்டுள்ளது அதன்படி டோர் ஓப்பன் வார்னிங், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், லேன் சேஞ்ச் அசிஸ்ட், புதிய கோல்டன் நிறம், விண்ட் மில் டர்பைன் அலாய் வீல், 4 வீல் டிரைவ் வேரியன்ட் ஆகியன இந்த காரில் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் ஜீப் நிறுவனத்தின் மெரிடீயன் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மாதம் மொத்தம் 200 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இந்த கார் விற்பனைக்கே வரவில்லை. இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர்டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170 பிஎஸ் பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ள கார் ஸ்கோடா குஷாக் கார் தான். இந்த கார் மொத்தம் 196 எண்ணம் கடந்த ஜனவரி மாம் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் வெறும் 113 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 73 சதவீத வளர்ச்சியாகும்.
அடுத்ததாக 5வது இடத்தை பிடித்த கார் ஃபோக்ஸ்வேகன் டைகுன் இந்த கார் கடந்த ஜனவரி மாதம் 72 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் 61 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 18 சதவீத வளர்ச்சியாகும். 6வது இடத்தை சிட்ரோட் சி3 ஏர்கிராஸ் கார் பிடித்துள்ளது. கடந்த ஜனவரியில் வெறும் 16 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் 40 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 60 சதவீத வீழ்ச்சியாகும். முழு எஸ்யூவிகளிலேயே சிட்ரோல் சி5 ஏர்கிராஸ் கார் தான் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் எதிர்பாராத அளவு மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்குக் காரணம் காரணம் வரப்போகும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் எனச் சொல்லப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல்வாதிகள் தயாராகத் துவங்கியுள்ள நிலையில் அவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு இந்த காரை இப்பொழுதே வாங்கி போடத் துவங்கியிருப்பார்கள் எனத் தெரிகிறது. பொதுவாக இந்த காரை அதிகம் அரசியல்வாதிகள் பயன்படுத்துவதால் இந்த காருக்கு மார்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








