தப்பித் தவறிக் கூட இதெல்லாம் கார்ல எடுத்துட்டு போகாதீங்க! அப்புறம் உசுருக்கே ஆபத்தாகிடும்!
கார் பயணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. காரில் பயணிக்கும் போது நமக்கு எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என நினைப்போம். இதனால் காருக்குள் எப்பொழுதும் நமக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வைத்திருப்போம். டிஸ்யூ பேப்பர் முதல் தண்ணீர் பாட்டில் வரை பல பொருட்கள் எப்பொழுதும் காருக்குள் வைத்திருப்போம். ஆனால் சில பொருட்களை காருக்குள் வைத்திருப்பது பெரும் ஆபத்தானது. இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். அப்படியாக எந்தெந்த பொருட்களை காருக்குள் வைத்திருக்கக் கூடாது எனக் காணலாம்.
சானிடைசர்
கொரோனா பரவலுக்கு பிறகு பலர் சானிட்டைசர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சானிட்டைசர்கள் ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது எளிதில் தீ பற்றிக்கொள்ளக்கூடிய தன்மை கொண்டது. என்னதான் நாம் காரில் ஏசிப் போட்டுச் சென்றாலும் காரை பார்க் செய்து விட்டுச் செல்லும் போது கார் நேரடியாக வெயிலிலிருந்தால் உள்ளே அதிகமாக வெப்பமாகிவிடும். இதில் காருக்குள் அடிக்கும் வெயில் நேரடியாக அந்த சானிட்டைசர் பாட்டில் மீது பட்டால் அதில் உள்ள கேஸ் உருவாகி சானிடைசர் வெடிக்கும் அபாயம் கூட ஏற்படும். இப்படியான சம்பவம் வெளிநாட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் காருக்குள் சானிடைசர் பாட்டில்களை வைக்க வேண்டாம்.

சன்ஸ்கிரீன்- காஸ்மெடிக்ஸ்
பலருக்கு வெயிலின் தாக்கம் தன் உடம்பில் தாக்காதபடி சன்ஸ்கிரீனை பயன்படுத்துவார்கள். இந்த கிரீம்கள் அதிக வெப்ப சென்சிட்டிவானவை. இதை அதிக வெப்பம் மிகுந்த இடத்தில் வைத்தால் அதன் தன்மை மாறி கெட்டு போய் விடும் குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கும் இடத்தில் மட்டமே இதை வைக்க வேண்டும் காருக்கு வெப்பம் மாறி மாறி இருக்கும் என்பதால் காருக்குள் இவைகளை வைத்தால் இது கெட்டுப் போய்விடும். இதைப் பயன்படுத்தினால் நமக்குத் தோல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மருந்துகள்
சிலருக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை மாத்திரை அல்லது மருந்து சாப்பிடவேண்டியது இருக்கும். அதனால் அவர்கள் எப்பொழுதும் தாங்கள் சாப்பிடும் மருந்துகளின் ஒரு செட்டை கார்களிலும் வைத்திருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. மருந்துகள் தட்ப வெப்ப நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை காருக்குகள் வெப்பம் மாறி மாறி இருப்பதால் அதன் பவர் குறைந்துவிடும் அல்லது கெட்டுப் போய்விடும். அதனால் மருந்துகளை நிரந்தரமாக கார்களில் வைக்க வேண்டாம்.
லைட்டர்
சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கார்களில் ஒரு லைட்டரை போட்டு வைப்போம், அவசரத்திற்குப் பயன்படும் என லைட்டரை வைத்திருப்பார்கள். ஆனால் லைட்களில் லிக்யூட் கேஸ் இருக்கிறது. இது அதிகமாக எரியும் தன்மை கொண்டது. இது காரில் ஒரு வேலை வெப்பம் அதிகமானால் இது எளிதில் தீப்பற்றிக்கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த காரும் தீயில் எரியும் அபாயமும் இருக்கிறது.

ஒயின்
சிலர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கார்களில் அவர்கள் செல்லும் இடங்களில் அவர்களுக்கு பிடித்த பிராண்ட் சரக்கு இருக்காது என்பதால் கார்களில் எப்பொழுதும் அவர்களுக்கு பிடித்த பிராண்ட் சரக்கை வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். இது முற்றிலும் ஆபத்தானது சானிட்டைசர் எப்படி ஆபத்தோ அதே போல சரக்கிலும் ஆல்கஹால் இருப்பதால் அதுவும் ஆபத்தானது.
பிளாஸ்டிக் பாட்டில்
கார்களில் பயணம் செல்லும் போது தண்ணீர் தாகம் எடுத்தால் குடிப்பதற்காகச் சிலர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் கார்களில் இதை வைத்திருப்பது பெரும் தவறு. காருக்குள் வெளியில் நேரடியாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடித்தால் தண்ணீர் முழுவதும் கெட்டுப் போய்விட வாய்ப்பு இருக்கிறது. அந்த தண்ணீரைக் குடித்தால் கேன்சர் கூட வர வாய்ப்புள்ளது. அதனால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications