டப்பா காரா இருந்தாலும் மாருதியைத்தான் மக்கள் நம்புறாங்க! டாப் 10 பட்டியலில் மாருதி ஆட்சி தான் போங்க!
பிப்ரவரி மாதம் பிறந்ததையடுத்து ஜனவரி மாதம் ஒவ்வொரு நிறுவனங்களாக தங்கள் விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் வெளியாகிவிட்டது. இந்த பட்டியலில் எப்பொழுதும் போல மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. புதிதாக நம்மை ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் இந்த டாப் 10 பட்டியலைக் காணலாம் வாருங்கள்
மாருதி ஆல்டோ
மாருதி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ கார் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 21,411 கார்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையான 12,342 கார்கள் என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை மார்கெட்டில் ரூ3.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

மாருதி வேகன் ஆர்
அடுத்தாக 2022ம் ஆண்டு சிறப்பான விற்பனையாகி முதலிடத்திலிருந்த வேகன் ஆர் கார் கடந்த ஜனவரியில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வேகன் கார் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது மாருதி நிறுவனம் கடந்த ஜனவரியில் மட்டும் மொத்தம் 20,466 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் மொத்தம் 20,334 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் சிறிய கர் செக்மெண்டில் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகும் காராகும். கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 16,440 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தம் 19,108 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையான 12,061 கார்களை விட ஜனவரியில் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி பலேனோ
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் இந்த மாருதி பலேனோ கார் தான். இந்த காரின் புதிய தலைமுறை கார் கடந்தாண்டு வெளியான விலையில் விற்பனை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 16,357 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 6791 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
டாடா நெக்ஸான்
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் எஸ்யூவி காராகும். இந்த கார் ஐசிஇ இன்ஜின் மற்றும் இவி ஆகிய இன்ஜின்களுடன் விற்பனையாகி வருகிறது. டாடா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகி வரும் கார் இது தான். அதே நேரம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் 5ம்வது காராக இது இருக்கிறது. கடந்த மாதம் மொத்தம் 15,567 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் 13,816 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த டிசம்பரில் 12,053 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
ஹூண்டாய் கிரெட்டா
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே ஹூண்டாய் கார் இது தான். இந்த கார் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 15,037 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தம் 9869 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்து. கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 10,205 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை க்ரெட்டா காரை இந்தாண்டு இறுதியில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி பிரெஸ்ஸா
புதிய தலைமுறை பிரெஸ்ஸா கார் கடந்தாண்டு அறிமுகமானது. இந்த கார் சப் காம்பேக்ட் எஸ்யூவியில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருந்தது. ஆனால் டாடா நெக்ஸான் அந்த இடத்தை பிடித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம்14,359 கார்கள் விற்பனையாகியிருந்தன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் 11,200 கார் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு விட்டாரா பிரெஸ்ஸாவாக இருந்த போது 9576 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா பஞ்ச்
டாடா மோட்டார்ஸின் பஞ்ச் கார் இரண்டாவதாக அதிகமாக விற்பனையாகும் காராகும். கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 12,006 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு முதல் சிறப்பாக விற்பனையாகிவரும் காராக இருக்கிறது. கடந்தாண்டு ஜனவரியில் மொத்தம் 10,027 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த டிசம்பரில் 10,586 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாருதி ஈக்கோ
மாருதி நிறுவனம் ஈக்கோ வனை குறைந்த விலையில் அதிக நபர்கள் செல்லும் வாகனமாக விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் மொத்தம் 11,709 வேன்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் மொத்தம் 10,528 வேன்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 10,581 வேன்கள் விற்பனையாகியுள்ளது.
மாருதி டிசையர்
இந்த டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே செடான் கார் இது தான். இந்த செக்மெண்டில் மாருதி தான் முதன்மையான விற்பனையைப் பெற்று வருகிறது. கடந்த மாதம் மொத்தம் 11,317 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதே செக்மெண்டில் இரண்டாவதாக விற்பனையாகும் ஹோண்டா அமேஸ் கார் வெறும் 5,580 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த மாத விற்பனையைக் கடந்தாண்டு ஜனவரி விற்பனையுடன் ஒப்பிடும் போது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு 14,967 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த டிசம்பர் மாதம் 11,997 கார்கள் விற்பனையாகியிருந்தது. குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








