நம்பர் 1 இடத்தில் மாருதி! 9வது இடத்தில் தான் ஒரு ஆச்சரியம் காத்திருக்குது! - டாப் 10 எஸ்யூவி கார்கள்
கடந்த பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் தற்போது எந்தெந்த கார்கள் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.
1. பிரெஸ்ஸா - Maruti Suzuki Brezza-15,787
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸாக கார் கடந்த மாதம் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக இருந்துள்ளது. வழக்கமாக மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாகச் செயல்படவில்லை என்ற பேச்சு இருந்தது. தற்போது அது மாற துவங்கியுள்ளது. கடந்த மாதம் மட்டும் மொத்தம் 15,787 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 9,256 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 71 சதவீத வளர்ச்சியாகும்.

2. நெக்ஸான் - Tata Nexon - 13,914
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் தான் இந்த நிறுவனம் நீண்ட நாட்களாக முதலிடத்திலிருந்தது. தற்போது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. மொத்தம் 13,914 கார்கள் கடந்த பிப். மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் 12,259 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 14 சதவீத வளர்ச்சியாகும்.
3. பஞ்ச் - Tata Punch - 11,169
டாடா நிறுவனத்தின் இந்த கார் குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனையைப் பெற்ற ஒரு காராகும். கடந்த பிப். மாதம் மொத்தம் 11,169 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் மொத்தம் 9592 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஒரே ஆண்டில் 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
| Rank | Rank | Feb'23 | Feb'22 | Growth (%) | |
| 1 | Maruti Brezza | 15,787 | 9,256 | 71 | |
| 2 | Tata Nexon | 13,914 | 12,259 | 14 | |
| 3 | Tata Punch | 11,169 | 9,592 | 16 | |
| 4 | Hyundai Creta | 10,421 | 9,606 | 8 | |
| 5 | Hyundai Venue | 9,997 | 10,212 | -2 | |
| 6 | Kia Sonet | 9,836 | 6,154 | 60 | |
| 7 | Maruti Grand Vitara | 9,183 | - | - | |
| 8 | Kia Seltos | 8,012 | 6,575 | 22 | |
| 9 | Mahindra Scorpio | 6,950 | 2,610 | 166 | |
| 10 | Mahindra Thar | 5,004 | 5,072 | -1 |
4.ஹூண்டாய் கிரெட்டா - Hyundai Creta - 10,421
ஹூண்டாய் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கார் இதுதான். கடந்த பிப். மாதம் மொத்தம் 10,421 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் வெறம் 9,606 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 8 சதவீத வளர்ச்சியாகும். இந்த காரும் நீண்ட நாட்களாக டாப் 10 பட்டியலிலிருந்து கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
5. ஹூண்டாய் வென்யூ - Hyundai Venue - 9,997
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்த பட்டியலில் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்கும் முதல் கார். கடந்த பிப். மாதம் இந்த கார் மொத்தம் 9,997 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் 10,212 கார்கள் விற்பனையாகியுள்ளது. விற்பனையில் 2 சதவீதம் வீழ்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.
6. கியா சோனட் - Kia Sonet - 9,836
கியா நிறுவனத்தின் சோனட் கார் கடந்த பிப். மாதம் மிகப்பெரிய அளவிலான விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த பிப். மாதம் 9,836 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் வெறும் 6,154 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இது விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியாகும்.
7. மாருதி கிராண்ட் விட்டாரா - Maruti Grand Vitara - 9,183
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் சமீபத்தில் தான் அறிமுகமானது. அறிமுகமாகி சில மாதங்களிலேயே விற்பனை பட்டாசு காட்டி வருகிறது. கடந்த பிப். மாதம் மொத்தம் 9,183 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு பிப். மாதம் இந்த கார் அறிமுகம் செய்யப்படாததால் விற்பனையை ஒப்பிட முடியாது.
8. கியா செல்டோஸ் - Kia Seltos - 8,012
கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் தொடர்ந்து விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த பிப். மாதம் இந்த கார் மொத்தம் 8,012 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்., மாதம் வெறும் 6,575 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 22 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
9. மஹிந்திரா ஸ்கார்பியோ - Mahindra Scorpio - 6,950
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காருக்கு மக்கள் மத்தியில் திடீர் மவுசு அதிகமாகியுள்ளது. ஸ்கார்பியோ என் காரின் அறிமுகம் முக்கியமான காரணம். கடந்த பிப். மாதம் மொதம் 6,950 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு பிப். மாதம் 2610 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 166 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை நடந்ததிலேயே இது தான் அதிகமான வளர்ச்சியாகும்.
10. மஹிந்திரா தார் - Mahindra Thar - 5,004
மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் இந்த பட்டியலில் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்கும் 2ம் காராகும். கடந்த பிப். மாதம் மொத்தம் 5,004 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு 5,072 கார்கள் விற்பனையாகியிருந்தது. விற்பனை ஒரு சதவீதம் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








