பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க வரிசையாக நிறைய புதுக்கார் வரப்போகுது! ஒன்னொன்னா வாங்கி போடுங்க!

2023 ஆண்டு மார்ச் மாதம் பிறந்துவிட்டது. இது நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பொதுவாக இந்த காலகட்டத்தில் புதிய கார்களின் அறிமுகம் பெரிய அளவில் இருக்காது. ஆனால் இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ் 6 கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டம் அமலுக்கு வருகிறது. அதனால் அந்த விதிகளின்படி உள்ள கார்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

அதனால் வரிசையாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் இன்ஜினை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். சில நிறுவனங்கள் மார்ச் மாதம் தங்கள் கார்களை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த பதிவில் இந்த மாதம் அறிமுகமாகவுள்ள கார்களை பற்றி காணலாம்.

பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க வரிசையாக நிறைய புதுக்கார் வரப்போகுது! ஒன்னொன்னா வாங்கி போடுங்க!

புதிய ஹோண்டா சிட்டி - மார்ச் 2 - Honda City 2023

இந்த மாதம் முதலில் அறிமுகமாகப்போகிறது புதிய ஹோண்டா சிட்டி கார் தான். மார்ச் மாதம் 2ம் தேதி அறிமுகமாகப் போகிறது. எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட் எக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் அறிமுகமாகவுள்ளது. இந்த காரில் பிஎஸ் 6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. மேனுவல் சிவிடி கியர் பாக்ஸ் உள்ளது. டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது.

டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா டீசல் - Innova Crysta

பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க வரிசையாக நிறைய புதுக்கார் வரப்போகுது! ஒன்னொன்னா வாங்கி போடுங்க!

டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா கிரைஸ்டா டீசல் காருக்கான புக்கிங்கை கடந்த ஜனவரி மாதமே துவங்கிவிட்டது. இந்த காரில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் சேர்த்து பொருத்தப்பட்டுள்ளது.

இதில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இல்லை. இந்த கார் ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ், மற்றும் இசட் எக்ஸ் ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. இந்த காரின்விலை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா - மார்ச் 21 - Hyundai Verna

ஹூண்டாய் நிறுவனம் வெர்னா காரை வெளிப்புறத்தோற்றத்தை முழுமையாக மாற்றி, கேபினையும் அப்டேட் செய்து புதிய அம்சங்களை எல்லாம் வழங்கி அப்டேட் செய்து வெளியிடவுள்ளது. இந்த காருக்கான புக்கிங் துவங்கிவிட்டது. ரூ25 ஆயிரம் பணம் கெடுத்து இந்த காரை புக் செய்யலாம். இந்த காரின் விலை மார்ச் 21ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த கார் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுப்பாட்டுக்குட்பட்ட 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2023 ஹூண்டாய் அல்காஸர் - Hyundai Alcazar

பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க வரிசையாக நிறைய புதுக்கார் வரப்போகுது! ஒன்னொன்னா வாங்கி போடுங்க!

ஹூண்டாய் நிறுவனம் 2023 அல்காஸர் காருக்கான புக்கிங்கை துவங்கிவிட்டது. இந்த கார் மார்ச் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் அப்டேட்டாக 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இ20 பெட்ரோல், ஆர்டிஇ, ஸ்டார்ட்/ஸ்டாப் டெக்னாலஜிகளை கொண்டது. டீசலில் 1.5 லிட்டர் இன்ஜினே இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 - Hyundai i20

பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க வரிசையாக நிறைய புதுக்கார் வரப்போகுது! ஒன்னொன்னா வாங்கி போடுங்க!

ஹூண்டாய் கார்களின் பெரும்பாலான கார்கள் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுப்பாட்டிற்கு தகுந்த இன்ஜின் உடன் மாற்றப்பட்டுவிட்டது. இதுவர ஐ20 கார் அப்டேட் செய்யப்படவில்லை. இதில் டீசல் வேரியன்ட் கார் நிறுத்தப்படுகிறது. விரைவில் ஐ20 மற்றும் ஐ20 என்லைன் காரில் அப்டேட்களை விரைவில் வெளியிடுவார்கள்.

மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் - Maruti Fronx

மாருதி தனது ஃபிராங்க்ஸ் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. பலேனோ காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரில் 5 வேரியன்ட்கள் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலையை மாருதி நிறுவனம் இந்த மார்ச் மாதம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் பலேனோ, பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு இடையில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் அதிகமான அறிமுகங்கள் இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் பிஎஸ்6 கட்டுப்பாட்டின் 2ம் கட்டம் அமலுக்கு வரும் அறிவிப்பு முக்கியமான காரணம் ஏப் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறையின்படி ஒரு வாகனத்தின் இன்ஜினில் ரியல் டைமில் மாசுக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட்டை செய்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 1, 2023, 12:40 [IST]
English summary
List of upcoming cars launches in march 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X