35 கி.மீ மைலேஜ் மட்டுமல்ல புதுசா வரப்போற ஸ்விஃப்ட் கார்ல இவ்வளவு விஷயங்கள் புதுசா இருக்குதா?

பெரும்பாலான இந்தியர்களுக்குப் பிடித்த கார் மாருதி ஸ்விஃப்ட், இந்த கார் அறிமுகமான காலத்திலிருந்தே பலருக்கு இந்த காரை வாழ்நாளில் ஒரு நாள் நிச்சயம் வாங்கி விட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனால் பலர் சிறு வயதில் கண்ட கனவை இன்று நினைவாக்க படித்து வேலைக்குச் சென்று இந்த காரை வாங்கி வருகின்றனர். இன்னும் பலர் இந்த காரை வாங்கும் ஏக்கத்தில் இருக்கின்றனர்.

இந்த கார் அந்த அளவிற்கு இந்தியர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது. இதனால் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் விற்பனையிலிருந்து வருகிறது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை அவ்வப்போது பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஸ்விஃப்ட் கார் தற்போது புதிய பரிமாணத்தைப் பெறப்போகிறது.

35 கி.மீ மைலேஜ் மட்டுமல்ல புதுசா வரப்போற ஸ்விஃப்ட் கார்ல இவ்வளவு விஷயங்கள் புதுசா இருக்குதா?

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்த கார் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட கார் குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புதிய அப்டேட்டில் காரின் வெளிப்புறத்தில் தான் அதிகமாக மாற்றங்கள் செய்யப்படவுள்ளன முதலில் காரின் நீளம் மற்றும் அகலம் அதிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீளத்தில் வீல் பேஸை அதிகப்படுத்தப்போவதாகும் தகவல்கள் உள்ளன. அதே போல அகலத்திலும் தற்போது உள்ள காரை விட அகலமாக வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தாக காரின் முன்பக்க டிசைன், தற்போது உள்ள டிசைன் மற்றாப்பட்டு முன்பக்கம் பார்க்க அக்ரஷீவாகவும், ஸ்போர்ட்டி லுக்கிலும் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பம்பர் டிசைன் ஷார்ப்பாகவும் கிரில் பகுதி போல்டாகவும் இருக்கும்படி மாற்றம் செய்யப்படவுள்ளது.

பக்கவாட்டில் முக்கிய அப்டேட்டாக டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போக பின்பக்க டோர் ஹேண்டில் போசிஷன் மாற்றப்பட்டு இன்னும் எளிதாக திறக்கும்படியாக இடத்திற்கு மாறப்படவுள்ளது.

காரின் பின்பக்கம் பல ஸ்டைல் அப்டேட்கள் வரவுள்ளன. முக்கியமாக புதிய எல்இடி லைட்கள், ஸ்போர்ட்டி ரியர் பம்பர் உள்ளிட்ட பல விஷயங்கள் மாற்றம் செய்யப்படவுள்ளன. இது போக இந்த அப்டேட்டில் இந்த காருக்கு உள்ளேயும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்படவுள்ளன.

முக்கியமாக மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டு லே அவுட், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கண்சோல், புதிய சீட்கள், மற்றும் அதிக இடவசதி மற்றும் சொகுசு நிறைந்த பின்பக்க சீட் ஆகியன இடம் பெறவுள்ளன.

இது போக புஷ் ஸ்டார்ட் பட்டன், டிம்மிங் ஐஆர்விஎம், எலெக்ட்ரிக்கலி ஆப்ரேட்டட் ஓஆர்விஎம், ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், கனெக்டெட் கார் டெக் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது. இப்படியாகப் பழைய காரிலிருந்து புதிய தலைமுறை கார் பெரிய மாற்றங்களை எல்லாம் பெறப்போகிறது.

இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதனால் இந்த கார் 35 கி.மீ வரை மைலேஜை இந்த கார் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போக இந்த காரில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அது மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு. ஹைபிரிட் இல்லாத காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த இன்ஜின் பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்ரக காரில் உள்ள இன்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, March 2, 2023, 18:30 [IST]
English summary
List of updates and features you can expect in the 2024 maruti swift
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+