இந்தியா தான் மெயின் டார்க்கெட் போல!! கோடிகளில் விலை கொண்ட கார்கள் வரிசைக்கட்டி வருது!

லோட்டஸ் எமிரா (Lotus Emira) என்ற ஸ்போர்ட்ஸ் கார் அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த லேட்டஸ்ட் அறிவிப்பை லோட்டஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றியும், இந்த விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

ஐகானிக் பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லோட்டஸ் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மார்க்கெட்டில் தனது கார்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. லோட்டஸ் பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள முதல் கார் ஓர் எலக்ட்ரிக் கார் என்பது இதில் கூடுதல் சிறப்பு. லோட்டஸ் நிறுவனம் அறிவித்தப்படி, அதன் எலட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

lotus confirmed emira india launch

கடந்த நவம்பர் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட எலட்ரே கார் தான் இந்தியாவில் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் கார் ஆகும். எமிராவின் இந்திய அறிமுக நிகழ்ச்சியில், இந்தியாவிற்கான தனது 2வது கார் குறித்த அறிவிப்புகளையும் லோட்டஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லோட்டஸ் பிராண்டில் இருந்து அடுத்ததாக எமிரா என்கிற ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டுவரப் படுகிறது.

லோட்டஸ் எமிரா காரின் இந்திய அறிமுகம் 2024இல் நடைபெற உள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த லோட்டஸ் கார் நிறுவனத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிறுவனம் தற்சமயம் கீலே என்ற சீன நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில், எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் மூலமாக தனது கார்களை விற்பனை செய்ய லோட்டஸ் திட்டமிட்டுள்ளது.

lotus confirmed emira india launch

இந்த எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸுக்கு இந்தியாவில் டெல்லியில் மட்டுமே ஷோரூம் உள்ளது. இதனால், தற்போதைக்கு இந்தியாவில் எந்தவொரு மூலையில் இருந்து லோட்டஸ் காரை புக் செய்தாலும், டெல்லியில் உள்ள இந்த ஷோரூம் வாயிலாகவே டெலிவிரி செய்யப்படும். 2024இல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள லோட்டஸ் எமிரா கார் உலகளவில் கடந்த 2021இல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

மற்ற லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் கார்களை போன்று, எமிராவும் குறைந்த எடையில் உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் காராக விளங்குகிறது. இதனால், இந்த காரை ஹேண்டில் செய்வதும் எளியது மற்றும் காரின் செயல்படுதிறனும் சிறப்பாக கிடைக்கிறது. லோட்டஸ் நிறுவனத்தில் 'இ' எழுத்தில் துவங்கும் கார்களே அதிகம். உதாரணத்திற்கு, எலைஸ், எக்ஸிக் மற்றும் எவோரா.

lotus confirmed emira india launch

இந்த வரிசையில் வந்த மாடல் தான் எமிரா என்றாலும், மேற்கூறப்பட்ட லோட்டஸ் கார்களை காட்டிலும் எமிராவின் ஃபிட்டிங்ஸ் மற்றும் ஃப்னிஷிங்ஸ் சிறப்பானதாக உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், எமிரா பார்ப்பதற்கு எவிஜா ஹைப்பர் கார் போன்று இருக்கும். இந்தியாவில், லோட்டஸ் எமிரா மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒன்றான, 2.0 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 360 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனத்தின் என்ஜினான இதன் உடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மற்றொரு என்ஜின் ஆப்ஷனான டொயோட்டாவின் 3.5 லிட்டர் வி6 என்ஜின் அதிகப்பட்சமாக 400 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

lotus confirmed emira india launch

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லோட்டஸ் நிறுவனம் இந்தியாவில் நெட்வொர்க்கை முடிந்தவரையில் விரைவாக விரிவுப்படுத்த விரும்புவது, ஒரு வருடத்திற்கு உள்ளாக 2 விலையுயர்ந்த கார்களை அறிமுகப்படுத்தும் போதே தெரிய வருகிறது. லோட்டஸ் எமிரா காரின் விலை இந்தியாவில் எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பது தெரியவில்லை. புதிய எமிரா ஸ்போர்ட்ஸ் காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 23:45 [IST]
English summary
Lotus confirmed emira india launch check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X